பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தேவார ஒளிநெறிக் கட்டுரை 104. தொழில், தொழில் வகை 1272). (i) உழுதல் தொழிலில்-மேழிகொண்டு உழுதல், நாறு நடுதல், கதிரறுத்தல் முதலியனவும் (ii) இறை வனைப் பணியும் தொழிலில் - தொண்டு செய்வதும், தாம் பாடிய தேவாரத்தைப் பரவி ஒதுவதும் , (iii) மறையோர் தொழிலில் - எரி மூன்று ஒம்புதலும், தருப்பை, நெய், சமின்த கொண்டு வேள்வி செய்வதும், மறைவழிப்படியே நீர்க் குடங்கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வதும், வேதங்களே நாடிக் கற்பதும், (iv) கட்டுவத் தொழிலில் - மடவார்கள் கடனஞ் செய்ய முரவம் (ஒருவகைப்பறை) கரங்கொண்டு வர்சிப்பதும், (v) போர்த்தொழிலும் சொல்லப்பட்டுள. 105. நகரமும் நகா லக்ஷண உறுப்புக்களும் + [273-289) - (i) நகரங்கள்:-தழைந்த பொழில்கள், மாட மாளிகைகள், பெண்கள் கடனஞ் செய்யும் சிறந்த நாடக மேடைகள், செல்வம் நிறைந்த கடை கொள் மாடங்கள், ஆழ்ந்த கிடங்குகள், வட்ட மதில்கள், சாலைகள், கூடங்கள், (மேகத்தையும் நிலவையும் தொடும் உயர முள்ள) கோபுரங்கள், இடிதாங்கிகள், மண்டபங்கள்இவை நகரங்களுக்கு லக்ஷணமாய் விளங்கின. வேல் வடிப்போர் சேரி முதலிய தொழிலாளர் சேரிகள் - அமையப் பெற்றன. பறையொலி, சங்கொலி, பலியுளு. இவை தமை ஊர்கள்தோறும் காணலாம். (ii) கொடிகள் (278) :-துகில்களால் ஆயன, பலவித சித்திரக் கோலத்தன. மூங்கிலின் தண்டிற் கொம்பிற் பிணிக்கப்பட்டன. கடைகள், குன்றத் துச்சிகள்,கோயில்கள், குளிகைக ள், தேர்கள்,மாடங்கள், மாளிகைகள், வாயில்கள், வீதிகள் முதலிய இடங்களில் விரிந்து திகழ்ந்தன. கொடிகள் மேக மண்டலத்தை அளாவும், விண்ணில் திகழும், மதியைத் தடவும். பெரிய மாடத்து உயரும் கொடிகளின் நெருக்கத்தால்