பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தேவார ஒளிநெறிக் கட்டுரை (ii) பிரமன், மால் இருவர்க்கும் அரியாய் நின்றதை 9-ஆவது பாடலில் வழக்கமாய்க் குறிக்கின்ருர்; அங்ானம் 9-ஆம் பாடலிற் குறியாது வேறு பாடலிற் குறித்த பதிகங்கள் 26. இருவர்க் கருமையென்னும் விஷயமே யில்லாத பதிகங்கள் 12. (iii) சமணர், புத்தரைப் பற்றி 10-ஆவது பாடலில் வழக்கமாய்க் குறிக்கின்ருர். அங்ங்னம் 10-ஆம் பாடலிற் குறியாது வேறு பாடலிற் குறித்துள்ள பதிகங்கள் 9. அவர்களை ப்பற்றி ஒன்றும் சொல்லப்படாப் பதிகங்கள் 20. ராவணன், இருவர்க்கருமை, சமணர்-இம்மூன்று விஷயங்களும் இல்லாத பதிகங்கள் 6. ராவணன், இருவர்க்கருமை-இவ்விரண்டு விஷயங்களும் இல்லாத பதிகங்கள் 9 ; ராவணன் சமணர் - இவ்விரண்டு விஷயமும் இல்லாத பதிகங்கள்- 10; இருவூர்க்கருமை, சமண்ர்இவ்விரண்டு விஷயமும் இல்லாத பதிகங்கள் 5; ராவணன்இருவர்க்கருமை-இவ்விரண்டு விஷயமும் ஒரே பாட்டில் உள்ள பதி கங்கள் 6. 124. பதிக விசேடங்கள் (322) I (தலைப்பு 133-ம் பாக்க) (1) பதிக விசேடங்கள் :-அகப்பொருட் பதிகங்கள், அந்தாதித் தொடைப் பதிகம், அர்த்தநாரீசு கோலப் பதிகம், ஆசிரியப்பாவாக அமையும் பதிகங்கள், ஆற்றுப் படைப்பதிகங்கள், எழுகூற்றிருக்கைப்பதிகம், ஏகபாகப் பதிகம், கட்டளைக்கலித்துறையாக அமையும் பதிகங்கள், கோளறுபதிகம், சடைக்கோலப்பதிகம், சந்தப்பாவினப் பதிகங்கள், சீகாழிப் பல்பெயர்ப் பதிகங்கள், திருலே கண்டப் பதிகம், திருநீற்றுப் பதிகம், தேவி வர்ணனைப் பதிகம், நமச்சிவாயப்_பதிகம், பஞ்சாக்கரப் பதிகம், பறவை விடு துதுப் பதிகங்கள், மாலை மாற்றுப் பதிகம். யமகப் பதிகங்கள், யாழ்.மூரிப் பதிகம், வினவுரைப்