பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) உண்பதற்குச் சோறும் தந்து உம்மால் ஆளமுடியவில்லை; உடலில் உறுநோயைக் களைந்தும் ஆளமுடியவில்லை; ஆனல் ஆள்களே ஆளவல்லவர் தாம் நீர்-இக்காரணங்களால் உமக்கு ஆட்செய அஞ்சு கின்ருேம். (ii) ஒனகாந்தன் தளியுளாருடன் அசதி ஆடல் (5*) ஒனகாந்தன் தளியுளிரே ! r கங்கையாளோ வாய் திறவாள், கணபதியோ வயிறு தாரி, வேலவனே குமரன் பிள்ளை, தேவி இவர்களைக் கோலால் அதட்டி ஆள்வதில்லை. - எமக்குத் தெரிந்த தெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினுலும் வாயைத் திறந்து, உண்டு, இல்லை என்று நீர் சொல்வதில்லை; நீர் எம்மை ஆள்வான் இருந்து என்ன பயன் பலிகிரிந்து ஐயம் ஏற்கும் தொழிலையும் ஒழிக்க மாட்டீர். தொண்டர்கள் கூடிக்கூடி ஆடிப்பாடி அழுது அழுது அன்பு செய்தாலும், அவர்களுக்கு இன்பம் தரவேண்டும் என்பதை நீர் உணர்வதில்லை. உம்மைத் தேடித்தேடி நான் திரிந்து அலுப்புற்ருலும் என்னை நீர் கவனிப்பதில்லை; விட்டு ஒடிப்போவதும் இல்லை, ஒரு பற்றுத் தருவதும் இல்லை. கச்சிக் காமக் கோட்டம் (எல்லாம் தருவத்ற்கிருந்தும்) நீர் போய் ஊர்ப்பிச்சை கொள்வது என்ன காரணம்: மெய்சொல்லி ஆளமாட்டீர்; பின்னர் ஒன்று தருவதும் இல்லை, எம்மை ஆட்கொண்டீரே ஒழிய எதுவும் உமக்கு வேண்டியதும் இல்லை; எதுவும் எமக்குத் தருவதும் இல்லை, எதுவும் நீர் சொல்வதும் இல்லை; உம்மையன்றி வேறு யார் (உதவுபவர்) உளர் உம்மீது அன்பு வைத்து உமது திருவடிக்குப் பணி செய்யும் தொண்டர் உம்மிடமிருந்து பெறுவதற்கு உம் மிடம் என்ன இருக்கின்றது ! உமது ஆரமோ பாம்பு ; நீர்

  • - -- * பதிக எண். f