பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சக்தார்) பணியாக வழிகாட்டி என்னை நேசத்தினல் தமது ஆளாகக் கொண்டார் இறைவர். 4. பெருமானே ! உனக்கு ஆளாய் விட்டேன் என்றது (1) அத்தா ! உமக்கு ஆளாய் விட்டேன்! இனி அல்லேன் எனச் சொல்லமுடியாது; நான் ஆட்பட்டது பொய்யன்று; பெருமானே ; உமக்குக் குற்றேவல் செய் வேன்; உமது ஆணையால் உமக்கு அடிமை ஆயினேன்; இந்த இடர்ப் பிறவியிற் பிறந்து அயர்ந்த என்னே_ஆண்ட அருமருந்து நீர்; நீர் என் மனத்தில் வந்து இடங்கொண்டு விட்டீர்; இனி எக்சாணத்தாலும் உம்மை நான் மறவேன்; பெருமானே ! உம்மை நான் எங்ங்னம் வந்து இனிக் கூடுவேன்” என்று நான்-கயிலையில் கூறின வார்த்தையைக் குறிவைத்து-இங்கே (இவ்வுலகில்) நீர் வந்து என்னை ஆண்டு * விணுக வருந்தாதே’ என்று எனக்கு ஆறுதலைத் தந்தீர். இந்த வீணனையும் உகந்தீர்; உன்னே வாழ்விப்பேன் என்று கூறி உமக்கு வழியடிமையாம் என்னை ஆண்டீர். (2) என்னுடைய அறியாமையை அறிந்து, எனது கல்மனத்தைக் கசிவித்துத், திருவடி தரிசனத்தைத் தந்து, எனது துயரினை ஒழித்தவர் பெருமான். பொய் வழியிற் சென்று திரிக்க என்னை அங்கனம் போய் இடர்ப்படாமல் மெய்யாகவே வந்து என்னே ஆட்கொண்டார். 5. வன்ருெண்டன்’ எனப் பேர்பெற்றது பெருமான் அடியேனே ஆட்கொண்ட தினத்திற் சபை பார்கள் முன்பு நான் வன்மையான (கடிய) பேச்சுக்கள் பேசின காரணத்தால் வன்ருெண்டன்’ என எனக்குப் பேர் தந்து வாழ்வளித்தார். 6. தல யாத்திரை விசேடங்கள் 1. துறையூர்(18): இத்தலத்தப் பதிகத்தில், தலவா உ&ன வேண்டிக்கொள்வேன் தவநெறியே எனப் பாடினர். 7– * # H ■ -- 暉 H 曲 -- *"அவ்வத் தலப்பெயர்களின் அருகில் உள்ள எண் பதிக எண்.