பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) r" சிறந்ததும், நல்ல நீர்வளம் உள்ளதுமான மறைக்காடு என அறிந்தோம். t. 85. முதுகுன்றம் (விருத்தாசலம்) (25, 48) இது முக்கிதரும் தலம்; முத்தாறு சூழ்தரு தலம்; மாடங்கள், மதில், கோபுரம், மண்டபம் இவைகளை மூடி மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த கலம்; இங்கு (1) மலையகத்தே களிற்றை (ஆண்யானையை) ஆளி (சிங்கம்) கொல்லக், குறத்திகளின் குடிலின் முன்புறக்கே பெண் யானே வருந்தி கிற்கும்; (2) மேகம் படியும் மலையிடையே மகயானையின் பேரொலியும், குகையில் வளரும் சிங்கத்தின் இடி ஒசையும் எப்போதும் கேட்கும்; (3) மணி முத்தாற் றின் வெள்ள நீரில் வளைக்கப்பட்டு வருந்திக் கரையேறின வலிய களிற்றின் முழக்கொலியும் எப்போதும் கேட்கும். (4) மலர்க் கொத்துக்கள் நெருங்கிய பொழில் சூழ்ந்த பெரிய மதில் மீதும் மாளிகையின் மீதும் நிலா தவழும்; (5) ஆண் குரங்கு உண்பதற்காகப் பெண் குரங்கு பழத்தை' நாடி மலைப்புறக்கே சென் று, முதலில் முதுகுன்றப் பெரு மானின் திருவடியைத் தொழுது கிற்கும்; (6) நாணற் புல்லின் இடையே சங்குகள் ஒலி செய்யும்; (7) நெய்யை மொண்டு தீ வளர்க்கும் வேள்வியின் ஒலி எப்போதும் ஒலிக்கும். திருமால், பிரமன், சூரியன், இந்திரன் இவர்கள் தலை வணங்கிப் போற்றப், பதினெண் கணங்களும் சூழ, முரசம் அதிர, முதுகுன்றத்தில் அமர்ந்துள்ளார் பெருமான்; பிறை குடும் எம்பெரும்ானே !! அருளுதி என்று தேவர்கள் முறைப்படி வந்து பெருமானே வணங்குவர் ; (கூட்டத்தில் அடியார்கள்) முட்டிச் சென்று அடிதொழ கிற்கும் பெருமையர் முதுகுன்றத்து ஈசர். (ஆரூாராம்) தமக்குச் செம்பொனேக் கந்தருளி விளங்குகின்ற பெருமான் திருமுதுகுன்றத்து இறைவர். கிருமுதுகுன்று (என்றும்) விளக்கம் புெற்றுள்ள கலம். HF வில்லும் அம்பும் ஏந்திய கொடியோர் இத் தலத்தின் எல்லைப்புறத்தைக் காத்து கின்றனர்.