பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2, தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) உம்மிடம் பெறக்கூடியது யாது? பெண்களின் வளைகளைக் கொள்வதுதான் உமது தொழிலோ இரவில் எம் வீடு உமக்குத் தெரியுமே, நடந்துவரக்கூடும் அன்ருே ? உமது கையில் ஒரு பாம்பு, அசையில் ஒரு பாம்பு, கழுத்தில் ஒரு பாம்பு, உடலெங்கும் திருநீறு, ஒதுவது வேததேம், உமது வெள்ளேறு கோபித்து கோக்கும், உமது பாம்பு தீயைக் கக்கிப் பெருமூச்சு விடும், சுடுகாட்டிற் பேயொடு ஆடுவதை இனி விட்டுவிடும், հոபித்தரா என்ன? செந்தமிழின் பண்புகளில் வல்லவர்.தாமே நீர் பின்னை ஏன் உமது முன்கையிற் பாம்பு ஆட எங்கள் முன் வந்து கின்று அச்சம் தருகின்றீர்; உமக்கு ஐயம் (பிச்சை) இட வரமாட்டோம். பக்கத்தில் அழகி ஒருத்தி யுடன் பிச்சைக்கு வந்துள்ளிரே நடவும், நடவும்-நாங்கள் உமக்குப் பிச்சையிடமாட்டோம் ; பலவித வாத்தியங் களுடன் இன்னிசை பாடுகின்றீர், ஆடுகின்மீர் ; பிச்சைக்கு வரும் உமது கையிற் பாம்பு இனி வேண்டாம் ஐயா! உம்து ஊர் திருப்பைஞ்ஞ்லி என்கின்றீர், பிச்சைக்கு வந்த நீர் சிங்காரவிலாசத்துடன் மெல்ல வந்து கிற்கின்றீரே ; ஏன் இந்த அழகுக் கோலங்கள் சொல்வீராக. (iii) பறவை முதலியவற்றைத் துாதுவிடுதலும், தாது விடு சேதிகளும். தலைவனிடம் (ஆரூர்ப் பெருமானிடம்) தமது நிலையைக் கூறப் பெண்கள்-அன்னப்பெடை, கிளி, குயில், குருகு, கொண்டல் (மேகம்), சக்ரவாளப்புள் (பேடை), சேவல், நாரை, பூவை, வண்டு இவைகளை விளித்து நாங்கள் அவர்மீது பாடவேண்டும், அவரைப் பணிந்து ஏத்த வேண்டும், அவருடன் கூடவேண்டும், ஊடவேண்டும் என்பதையும், அவரை மறக்கமுடியவில்லை என்பதையும், அவரை கினைந்து உள்ளமும் உடலும் உருகுவதால் எங்கள் ஆடையும், வளைகளும் கழலுகின்றன என்பதையும், முலைகள் பீர் (பசலைப் பொன்னிறம்) கொண்டுள்ளன என்பதையும், துக்கமில்லாமல் அவரடியே காங்கள் பாடியும் பரவியும்,