பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198. .பார்வதி தேவி 2}5 (13) மொழி I o தூயது, மென்மை வாய்ந்தது, பண் இசை கொண்டது, குழல், யாழ் ஒலி கொண்ட இனிமையது, பால்போல இனிமை பூண்டது. (14) வாய்-வாயிதழ் பவள நிறத்தது, இலவு, கொவ்வைக் கனி போன்றது. (15) விரல் பந்து பூண்பது. (16) தேவியின் அணிகலன்கள் சிலம்பு, பட்டம், பிறை (கலையணி வகை), வளை. (17) தேவியின் புகழ் o தேவி எல்லையற்ற, அழிவிலாக, பரந்த புகழ் கொண்டவள். (18) தேவியின் மனம் கேவி நிறை மனத்தினள், பெரிய மனத்தினள். (iii) தேவியைப் பற்றிய சேதிகள் (1) தேவி அஞ்சின சமயங்கள் ராவணன் கயிலையை எடுத்தபோதும், பெருமான் நஞ்சை உண்டபோதும், அவர் யானையின் கோலை உரித்த போதும், (அந்த ஈரத் கோலேப்) போர்த்துக்கொண்ட போதும், கோடி என்னும் கலத்திற் பெருமானுடன் தனித் திருக்கும் 'போதும் தேவி அஞ்சினள். (2) தேவி அறம் வளர்த்தது - உலகை உய்விக்கக் காஞ்சியில் காமதோட்டம் என்னும் அறச்சாலையைத் தேவி அமைத்து ஊர்கிள்தோறும் அறம் புரிகின்ருள்.