பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208. աոա, செடி முதலிய 228

  • * y 4 து கதலி: . வாழை பாாகக. கமலம்: தாமரை - பார்க்க.

கமுகு: இதன் அழகிய பாளை நறுமணம் வீசும் ; கமுகம் சோலை கண்குளிரும் காட்சியைத் தரும்; எப் பொழுதும் நீர்பாயக் கமுகு வளரும்; வரிசையாக வளரும்; கமுகு குலைகளைக் கொண்டது. கரந்தை: மணம் உடையது, சிவபிரான் அணிவது. கரும்பு. கழை: இனிப்பு உள்ளது; மன்மதன் வில் லாகக் கொண்டது ; கன்னியரின் மொழிக்கு உவமை கூறப்பட்டது; கழனிகளில் வளரும்; குருகுபாயக் கொழுங் கரும்புகள் நெரித்து சாறுதரும்; செந்நெல் வயல்களின் அருகே கரும்புகள் வளரும்; கரும்பில் முத்து பிறக்கும்; கரும்பின் தேன் போன்ற சாறு கருப்பஞ் சோலையில் மணம் .வீசும். கல்லால்: (ஆல் - பார்க்க) இதன் கீழ் இறைவன் அறம் பகர்ந்தார் ; மறை நான் கையும் பகர்ந்தார். கழுநீர் : நீர்ப்பூ: குளங்களிலும், மடைகளிலும் வளரும். இது மணம் வீசும்போது கயல் மீன், சேல்மீன் தாவிக் குதிக்கும்; செந்நிறத்தது செங்கழுநீர். கழை: கரும்பு - பார்க்க. கள்ளி: சுடுகின்ற பாலை நிலத்தில் கள்ளி வற்றிப் போகும். கள்ளியின் கிளேக் கொம்புகளில் புரு ஈனும்; ஆண்புரு பெண்புருவுடன் குலவும். காவி. நீர்ப்பூ, குளத்திலும் மடையிலும் வளரும்; இந்த மலரில் வண்டுகள் நிறைந்த பண் செய்யும்; தேவியின் கண்ணுக்கு உவமை கூறப்பட்டது. குரவு : இதன் அரும்பு பாம்பின் பல்பேல இருக்கும், குரவம் տաա வீச, குயிலும் வண்டும் பாட, பாம்பு ஆடும். மாதர்களின் கூந்தலில் குராமலர் மணம் வீசும்; கோலக்கா,