பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ಜ್ಜಿ2 தேவார ஒளிநெறிக் తోరణ (சுந்தார்) குழல் : கருகிறத்தது, குராமலர் குடியுள்ளது, து மணம் உள்ளது, நெருக்கம் உள்ளது, வட்ட வடிவினது, நீண்டுள்ளது, திரண்டுள்ளது, சுருண்டுள்ளது, நெய்ப்புக் கொண்டது. கை: வளையல் அணிந்தது. தோள் : மூங்கிலை ஒக்கும். நுதல் : பிறை போன்றது: ஒளி கூடியது. பல் : வெண்ணிறத்தது. முகம் : தாமரை போன்றது. முலை : அழகு, இளமை, பருமை கொண்டது; குரும்பை (தென்னங் குரும்பை-இளநீர்), சிமிழ் போன்றது, பால் நலம் கொண்டது. மொழி : அழகும், ஊடல் இனிமையும், துய்மையும் . கொண்டது; கரும்புபோல் இனிப்புள்ளது; இசை கிரம்பி யது ; காகணவாய்ப்புள், கிளி - இவைகளின் பேச்சுப்போல் இனியது; கபடின்மை காட்டுவது. வாய்: அழகியது; பவளம்-கொவ்வைக் கனி-போலச் சிவந்தது. சாயல்: மயில்போலச் சாயல். உருவம்: அழகு இலக்குமி போன்ற அழகு; மான் கன்றுபோல உருவம். 3. மாதர்களின் பழக்கவழக்கங்கள் (1) ஆடல் T. திருக்கோயிலில் மாதர்கள் பாடலுடன் நடனம் ஆடுவர்; அப்போது முழவும், குழலும் ஒலிக்கும்; குழலும் முழவும் ஒலிக்க அரங்கிலும் ஆடுவர். அவர்கள் ஆடின. தலங்களாகத் துறையூர், நாகை, பாச்சிலாச்சிராமம் (திருவாசி), வடதிரு முல்வைாயில், வெஞ்சமக் கூடல் -