பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. " தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) கேதகை (தாழை), கொடிமுல்லை, கோங்கமலர், எக்கனத் கிளிர், சந்தனம், செண்பகம், பலங்கள் (பழங்கள்), பாதிரி, பொன், மணி, மயிற்பீலி, மல்லிகை, முத்து, யானே மருப்பு, வேங்கைமலர், வேய் (மூங்கில்)-இவை அலையுண்டு வரும். 2. கங்கை Fo கங்கைர்ே கடற்கரையொடு பொருது இழியும்; கங்கை வான்கின்று இழிந்தது; கடல்போலத் திரைகள் புரள வீசக் கொண்டது. 3. காஞ்சி கொங்குநாட்டில் உள்ளது. பேரூர் என்னும் தலம் இந்த ஆற்றின் கரையில் உள்ளது. 4. காவிரி o இது பொன்னி எனவும்படும். கடலொடு கூடும். இதன் கரையெலாம் வளப்பம் பொருக்கியவை. சோற்றை விளைவிக்கும் ஆறு. இ த னி ல் ஆடுபவர்களின் பாவம் திரும்; அஞ்ஞானம் ஒழியும் ; இதன் நீர் கங்கைரிேன் பெருமை வாய்ந்தது; காவிரிநீர் பாயும் புலமெலாம் பொன் என விளைவுகரும்; இதன் கரையில் உள்ள மரங்களிற் குயில் கடவும் ; கரையில் மயில் ஆடும் ; அன்னங்கள் உலவும் ; காவிரி சோழநாட்டைச் சூழ்ந்து செல்லும் ; தேசத்தில் உள்ளவர்கள் எல்லாம் காவிரிநீரில் தேர்ந்து ஆடுவர்; காவிரி யருகிற் பொழில்கள் நெருங்கி வளமும் அழகும் தருவன வாகும்; கரும்பு ஆலைகள் ஒலிசெய்யும்; காவிரிநீரில் மாதர்கள் குடைந்தாடுவர். காவிரியாற்று வெள்ளநீரில் அடித்துவரும் பொருள்க GNT/ГGNU GET அகில், ஏனல், ஐவனம் (மலைநெல்), கரும்பின் ரசம், கவரிமயிர், கறிமிளகு, கனி, கோங்கம், சந்தனத்துண்டம், புளிங்கு, பொன், மணி, மயிற்பீலி, மராமாம், மருதம், மலர், மாங்கனி, முத்து, யானிே மருப்பு, வாழைக்கனி, வேங்கைமலர். f