பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*1

  • ]

20 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்)

    • . னுடைய திருநாமங்களைக் கற்றவர் நற்கதி பெறுவர் : ஆதலால், அவரை ஏத்துதல் நமது கடமை என அறிமின்; அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையைக் கேட்டும், மலரிட்டுப் பெருமானை வணங்காமலும், பெருமான் நம்மை ஆள்வதை அறியாமலும் காலம் தழிக்கின் மீர் ; உங்கள் சுற்றத்தார்க்கெலாம் துணையாவீர் எனக் கருதி உங்களைப் பலர் முன்பு அழைக்கின்றேன்; வம்மின் வந்து திருவாரூர்ப் பெருமானே மறவாது தொழுமின்.

(2) நெஞ்சுக்கு (23(iii)) உள்ளமே ஊன் உணவைப் பாராதே, கினையாதே, விரும்பாதே ; புலியூர்ச் சிற்றம்பலத்துப் பெருமான் நமது பாவத்தைத் தீர்ப்பார்; இறைவனுக்குக் குற்றேவல் செய்வா யாக, கூச்சத்தைவிட்டு, குற்றங்களை ஒழித்து, கோப மனத்தை அடக்கி, மாதர் மீதுள்ள ஆசைகளை ஒழித்து இறைவனிடம் அன்புசெலுத்தி, அவரது கலமாம் எதிர் கொள் பாடியை அடைவாயாக. என் வழியில் இணங்கி நீ திருப்புனவாயிலைக் கருது; மாதர்களின் வஞ்சனைச் சூழலில் மயங்காதே மதி உண்டு, நல்ல விதியின் பயன் உண்டு ; திருஆரூர்ப் பெருமானே எக்காரணத்தாலும் மறவாதே ! தந்தையும் தாயும் எள்ளளவும் சார்வு ஆகார்; மனமே! என்னேடு இணங்கி வாழ் ; கிருத்தினைநகரில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தைச் சிந்தனை செய்வாயாக; தோற்றம் உண்டு என்ருல் மரணம் உண்டு : மனே வாழ்க்கை துயரம் தருவது; அறிவு மாறில்ை வஞ்சனே ஏற்படுகின்றது. ஆதலால், நற்கதிபெற எதிர்கொள் பாடி என்னும் கலத்தை அடைவோ மாக; பிறவியைப் பழிக்கு நீக்குவோமாக புறம்பயம் என்னும் கலக்கைக் கொழப்போவோமாக நமது ஊர், நமது சுற்றம், நாம்பெற்ற மக்கள், பெண்டிர், நிதி இவை கூடிய மனே வாழ்க்கையைப் பற்றிய கினைப்பை ஒழிப்பாயாக; பிணிக்கு இடமாகிய இவ்வுடல், பிறப்பு-இறப்பு ஆகிய துன்பங்க: நீக்கி, ஈசன் இருவடிக்கு ஆளாக நீ விரும் பில்ை திருத்தினைநகர்ச் சிங்க்கொழுந்தினை, மனம்ே ! நீ சிந்திப்பாயாக !