பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) $4. சிவபிரான் ஆண்ட, உடை போர்வை [75] த்ோல் முதலிய உடைவகை • - சிவபிரான் தோலுடுத்தே திரிவர் ; மான் தோலை உடுப்பார், புலித்தோலை மேலாடையாகத் தோள் மேலே அணிவார், யானையின் ஈரத்தோலைப் போர்த்து மகிழ்வார் ; தம்மை எதிர்த்து வந்த சிங்கமும், நீள் புலியும் கொழுத்த மதயானையும் அலறிப் பிளிறப் பெரும் போர்புரிந்து அவ்ை களேப் பிளந்து அவைதம் ஈர உரிவையை அணிந்தார் இறைவர் ; பட்டாடையும் அணிவார்; அரையிற் கீளும் கோவணமுமாக விளங்குவார்; அரையில் அணிந்துள்ள புலித்தோலின் மேலே கொடிய பாம்பைக் கச்சாகக் கட்டியுள்ளார்; பிரானுக்கு வெள்ளாடை விருப்பமில்லை ; வேங்கையின் தோல்தான் விருப்பம்; மான் தோலையும் ஆடையாக அணிவார், பல தலைகளை உடைய பாம்பை மாமணிக் கச்சாகக் கொண்டுள்ளார். 65. சிவபிரான் இருவர்க்கும் அரியராய் நின்றது (76) - திருமாலும் பிரமனும் அட்ட புட்பங்கொண்டு அடி போற்றியும் சிவபிரானுடைய அடிமுடியைக் காணமுடிய வில்லை. அவ்விருவராலும் அறிதற்கரிய சோதியாய்ப் பெரு நெருப்புருவாய், நெடியாய், நீண்டு கின்ருர் சிவனர். அரி - பன்றி உரு எடுத்தும், அயன் - (அன்னப் பறவையின்) உரு எடுத்தும், பூமியைத் தோண்டியும் பறந்தும், எங்கும் தேடியும், என்ன பாடுபட்டும் காணமுடியாதபடி, இருவரும் அஞ்சி அயர்ந்து போம்படி, கீழ்மேல் உற கின்ருர் சிவனர். சுடர் மண்டலம் மூன்றினும் அரியும் அயனும் தேடியும் அவர்களாற் காணமுடியாத பெருமை வாய்ந்தவர் பெருமான். சிங்கித்துத் தியானித்தும் அவர்களாற் காண முடியவில்லை; န္လင္ငံမ္ဟုဖ္ရစ္အိမ္ယုိး கண்டார்க்கும் காண்பதற்கரிய கனல் உருவாய் கிமிர்ந்து கின்ருர் பெருமான் :