பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. சிவபிரான் தன்மை முதலிய 53 . 15. அன்பு (82(17) o தம்மை அடைந்தவர் மாட்டும், கம்மைத் தியானிப் பவர் மாட்டும் அன்பு பூண்டவர் இறைவர். 16. ஆக்கல்-அழித்தல் [82(18)] ஆக்குபவரும் இறைவரே; அழிப்பவரும் இறைவரே. 17. ஆண்-பெண்-அலி.(82(19); (20) இறைவர் ஆனெடு பெண்ணும் உருவின்ர்; பிறத்தல் என்பது இல்லாமல்ே அவர் பெண், ஆண், அலியாகத் திகழ்வார் ; எனினும் அவர் பெண்ணும் அல்லர், ஆணும் அல்லர். 18. ஆதி, அந்தம் (82(21), (22)) இறைவர் ஆதியும்; அந்தமும், ஆனவர் ; தோற்றம், ஈறு இவற்றுக்கு மூலபுருஷர்; முன்னமே முளைத்த இவர் முற்றும் பின்னராக விளங்குவார் ; யாராலும் அளவு அறியாத ஆதியும் அங்கமும் கொண்டவர். 19. ஆழி (82(24) கடல்போல அகன்று உயர்ந்தவர் இறைவர். 20. இனியர் (82(32) எழு பிறப்பிலும் மனத்துக்கு இனியவர் இறைவர் ; அவரைக் கண்டவர் அவரைக் காதலிப்பர், கற்ற கல்வி யிலும் இனியர் அவர்; பெருமிதத்துடன் கண்ணே மூடிக் கொண்டு, சிங்தையில் கிடத்துடன் தியானித்தால் அவரது இனிமை விளங்கும்; பண்ணிடைத் தமிழ்போலவும், பழத் தினிற் சுவைபோலவும் இனிமை தருவார்; அவர் பேச்சைப் பேசும்போதே பெரிதும் இனிமை தருவார். ". . 21. உரு (82(87) . . தீ உருக்கொண்டு, அணு அளவினாய், ஊனுடை உடலில் ஒடுங்கிப் புகுந்து பரந்துள்ளார் இறைவர்.