பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

என்றும், “பெற்றமரும் பெருமானே யல்லாற் பேசுவது மற்றோர் பேச்சிலோமே”-(5-9) என்றும், “பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின் ...... மழபாடியை வாழ்த்துமே”-(145-2) எனவும் கூறி நமது வாழ்நாளை எங்ஙனம் கழிக்கவேண்டு மென்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். இப் பொன் மொழிகளையே பற்றி அநுட்டிக்க வேண்டும் என்பது எனது பேரவா.

சங்கரா சம்புவே சங்கரா சம்புவே
சங்கரா சம்புவே சாம்ப சிவனேயென்
அங்கணா என்றென்று மோலிட் டழைத்தரற்றும்
இங்கெனக்கு வாழ்நாள்கள் இவ்வாறே போகியவே

-என வருங் காஞ்சிப் புராணத்து[1] அருமைப் பாடலே எனது குறிக்கோளாக இருக்க வேண்டுமென்பது எனது பெரு விருப்பம்.

பேசுவது தேவார மேயலால் வாய்க்கெளிய
பேய்க் கிரந்தங்கள் பேசோம்

என்னும் தத்துவப் பிரகாசர் முழக்கொவியும் மறக்குங் தகையதன்று.

4. இங்ஙனம் ஆத்மார்த்தமான நோக்கத்துடன் எழுதி முடித்துப் பின்னர் 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்னுங் கருத்துடன் நூலை அச்சிட முயல்வதற்கும் போர்க்காரணமாகச் சகல பொருள்களும் விலையேறுவதற்கும் காலம் ஒத்து வந்தது. காகிதம் கிடைப்பதே ஒர் அரும் பொருளாயிற்று. பொருள் முட்டுப்பாடும் பெரியதாயிற்று. பிறருடைய பொருளுதவியின்றி முழுநூலையும் அச்சிடுதல் அசாத்தியமெனத் தோன்றிற்று. ஆயினும் ஈசன் திருவருள் எப்படியும் துணை செய்யும் என்னும் துணிவு கொண்டு சிறிது சிறிதாகவேனும் பகுதி பகுதிகளாகவேனும் எழுதினதை வெளியிட மென்று துணிந்து முதற் பகுதி யாக- ஸ்ரீ சம்பந்தப் பெருமானது தேவாரப் பதிகங்களின் சாராம்சமான பொருள்களை யெல்லாம் பாகுபடுத்தி 181 தலைப்புக்களில் ஒரு கட்டுரை எழுதி 'தேவார ஒளிநெறிக் கட்டுரை' என்னும் பெயருடன் ஒரு நூல் அண்மையில் வெளி யிட்டேன். இப்பொழுது இரண்டாம் பகுதியாக வெளிவரும் இப் பகுதியில் ஆாாய்ச்சியின் முதல் நூறு தலைப்புக்கள் ( முதல் சி வரை) அவை தமக்கு உரிய விஷயங்களுடன் வெளியாகின்றன.


  1. தழுவக் குழைந்த படலம், 234.