பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தை'ப் பேசினார். அதேபொழுதில், தமிழனும் மலையாளியும் பிறப்பதற்கு முன்னரே, மேற்குத்தொடர்ச்சி மலையில் பிறந்து அரபிக் கடலில் விழுகிற பெரியாற்றின் தண்ணீர் மலையாளியின் ஆதிக்கத்திருப்பதைவிட தமிழன் ஆதிக்கத்தில் இருப்பதுதான் தேசீய நலன் பெருகுவதற்கு வழி என்று வாதாடினார். இந்தத் தண்ணீர் பிரச்னையில், மலையாளிகளின் அவசியத்தையும் புறக்கணிக்கமாட்டோம் என்று ஒரு வார்த்தை போட்டுக்கொண்டார் இந்த வாதம் சரியான வாதம் என்று சுப்ரமணியத்தின் பேச்சு எந்த மலையாளி மகனையாவது அறிவுறுத்துமா? அறிவுறுத்தியிருக்கிறதா? கேரளமும் சென்னை ராஜ்யமும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையில், மலையாளியைப்பற்றி தமிழன் கவலைப்படாவிட்டால், பொருட்படுத்தாவிட்டால், பின்னர் தேசீய ஒற்றுமைக்கு உத்தரவாதம் ஏது? இருதிறத்தாரும் கலந்து இந்தச் சிக்கலான பிரச்னையைத் தீர்க்கவேண்டுமென்று பேசாத நிதி அமைச்சரின் பேச்சு எப்படி தேசீய ஒற்றுமைக்கு, ராஜ்யங்களின் பரஸ்பர நட்புக்கு உதவிபுரியும்? குறுகிய ராஜ்ய வெறியோடு, கேரளத்தின் தண்ணீரில் ஒரு பொட்டுக்கூட தமிழனுக்குக் கொடுக்கமாட்டோமென்று ராஜ்யப் பகைமைக்கு உடுக்கடித்து ஆவேசமூட்டும் திரு-கொச்சி முதலமைச்சர் பனம்பள்ளி போன்றோரின் தப்பான ஆறுத்தான போக்கை எவ்வாறு முறியடிக்க முடியும்?

மேலும் சுப்ரமணியம் என்னென்ன பேசினார் தெரியுமா ? தமிழர்களைவிட மலையாளிகளே திட்டவட்டமாகப் பெரும்பான்மையோராக உள்ள நீலகிரி - கூடலூர் தாலூகா சென்னை ராஜ்யத்தோடுதான் இருக்கவேண்டும் என்றார். மலபாருக்குச் சொந்தமான கொல்லங்கோட்டுக் காடும் சென்னை ராஜ்யத்திற்கு வேண்டும் என்று வாதாடினார். இங்கு மொழிவழி நியாயம் பேசவில்லை. "சென்னை ராஜ்யத்திற்கு காட்டுவளம் சுருக்கம். கேரளத்திற்கு காட்டுவளம் அதிகம். எனவே கொல்லங்கோட்டுக் காடு வேண்டும் என்றார். கூடலூரில் நல்ல தேக்கு மரங்களும், நல்ல வேட்டைக்காடும் இருப்பதால், காட்டு வளம் குறைந்த சென்னை ராஜ்யத்திற்கு அது தேவை. எனவே மலையாளிகளுக்கு விடமுடியாதென்றார். நெய்யாற்றின் கரைத் தாலூகாவில் தமிழ்ப் பகுதிகளை கிராம அடிப்படையில் சென்னை ராஜ்யத்திற்குத் தந்துவிடக் கோரிய நிதி அமைச்சர், கூடலூர் தாலூகாவில் மலையாளப் பகுதிகள் கிராம அடிப்படையில் கேரளத்திற்குப் போகட்டும் என்று நியாயம் பேசவில்லை. கூடலூர் தாலூகா சுளையாக சென்னை ராஜ்யத்தோடுதான் இருக்கவேண்டுமென்றும் அங்குள்ள மலையாளிகள் அமைதியாக சென்னை ராஜ்யத்தில் வாழ்வார்களென்றும் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை எங்களால் செய்து கொடுக்க முடியுமென்றும் பிடிவாதமாகப் பேசினார். 'தனக்கொரு நீதி பிறருக்கொரு நீதி' என்ற இதே மனப்பாங்கில்தான் அங்கு பனப்பள்ளியும் "தேவிகுளம் -பீர்மேட்டில் தமிழர்கள் அமைதியாக