பக்கம்:தைத் திங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 தைத் திங்கள்

கொண்டிருக்கும். பின்னர்க் கீழே இறங்கத் தொடங்கும். ஏறியது போலவே இறங்கும்போதும் அடிவானத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டேயிறங்கும். மரணக் கிணற்றில் சைக்கிளில் மேலே ஏறியவர்கள். இறங்கும்போதும் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே இறங்கு கிறார்கள் அல்லவா? அதுபோலத்தான் இஃதும்! முதல் மூன்று திங்களின் முடிவில் ஞாயிறு மேலே சென்றிருக்கும் உயரம், நம் பகுதியில் காலை ஏழரை மணிக்கு ஞாயிறு தெரியும் உயரம் அளவே இருக்கும். இப்படியாக, மேலே ஏற மூன்று திங்களும் கீழே இறங்க மூன்று திங்களுமாக ஆறு திங்கள் காலம் தொடர்ந்து வட துருவத்தில் ஞாயிறு தெரிந்துகொண்டிருக்கும். அதனால் அந்த ஆறு திங்கள் காலமும் அங்குத் தொடர்ந்து பகலாக இருக்கும். தென் துருவத்தில் பகலாக இருக்கும் காலத்திலும் இதேபோல நடைபெறும். அப்போது வட துருவம் இரவாக இருக்கும்.இது வெறுங்கற்பனையன்று. இன்றும் துருவப் பகுதிகளில் சென்று காணின் உண்மை விளங்கும்.

இந்த நில இயல்-வான இயல் உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் தேவரின் பகலும் இரவும் கற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும். தை முதல் ஆனி ஈறாக உள்ள ஆறு திங்கள் காலமாகிய வட செலவுக் காலம்(உத்தராயணம) வட துருவத்தின் பகல் காலமாகும; இதுதான் தேவரின் பகல் காலமாம். ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள ஆறு திங்கள் காலமாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/139&oldid=1323731" இலிருந்து மீள்விக்கப்பட்டது