பக்கம்:தைத் திங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 தைத் திங்கள்


தாரோடு தொடர்புடைய பல்வேறுவகைத் தொழிலாளர்களும் வந்து புத்தாடையும் பணமும் பல்வகைப் பொருள்களும் பெற்றுச் செல்வர். பொங்கலன்று வீடுதோறும் போந்து மங்கல இன்னிசை வழங்கிய மேளக்காரர் முதல் பல்வேறு கலைஞர்கள் வந்து வந்து பரிசு பெற்றுச் செல்வர்.

மார்கழித் திங்கள் பிறந்ததிலிருந்து பொங்கல் நாள் வரை நாடோறும் நள்ளிரவு தொடங்கி வைகறைப் பொழுதுவரையும் கலைஞர்கள் சிலர் தம் கலைச் செல்வத்தை மக்களுக்கு வழங்கி வருவர். சிலர் கொம்பு ஊதுவர்; சிலர் தாரை தப்பட்டிகளின் இசை வழங்குவர்; சிலர் சங்கு ஊதிச் சேகண்டி அடித்துச் செல்வர்; சிலர் இன்னிசைப் பாடல்கள் இசைப்பர். குடுகுடுப்பைக் காரர்கள் தம் குடுகுடுப்பையை ஒலித்துக்கொண்டே, நல் வாழ்த்துக்களை வரையறை யின்றி வானத்துக்கும் மண்ணுக்குமாக வாரி வாரி வழங்கிச் செல்வர். இவ்வாறாக இன்னும் சில உண்டு. இவ்வளவும் மார்கழி தொடங்கி மாட்டுப் பொங்கல் வரை பின்னிரவில் நடைபெறும். இத்தனை தரப்பினரும் மாட்டுப் பொங்கல் கழிந்த மறுநாள் காணும் பொங்கலன்று விடுதோறும் போந்து அவரவர்க்கேற்பப் பரிசுகளும் வரிசைகளும் பெற்று மகிழ்ந்து செல்வர்.

ஒரு திங்கள் காலம் ஓயாதுழைத்த இந்தக் கலைஞர்கள் ஒரு புறம் இருக்க,காணும் பொங்கலன்று புதிதாய்ச் சில கலைஞர்கள் வந்து பரிசு பெற்றுச் செல்வதும் உண்டு. அவர்களுள், கும்மியடிக்கும் ஏழைப் பெண்கள் குழுவினர் ஒருசாரார்; பொய்க்காலிக்குதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/69&oldid=1323707" இலிருந்து மீள்விக்கப்பட்டது