பக்கம்:தொடுவானம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைத்தாயோ தோழி !

சாவேரி திரிபுடை எடுப்பு உரைத்தாயோ? தோழி! அவரைக்கண்டு நீ உரைத்தாயோ? தோழி! மேல் எடுப்பு குரைக்கும் நாய் தெருவினில் குளிர்நிலா வானத்தில் குறிக் கெங்கே வருவது நற்றாயோ பக்கத்தில் அமைதி தாழை விலக்க எண்ணில் தாய்விழி மூடாது தலைவனே இனிக்காண இரவினில் ஆகாது பேழை எனைஅணைக்கும் அன்னைகை சோராது பிரிவுத் துயர் பொறுக்க இனியென்னால் ஆற்றாது விடிய விடிய கண்ணை இமைகளோ மூடாது வேலன் வெறியாட இடந்தரக் கூடாது கடிமலர் கொய்யாவோ நீர்மொண்டு போகவோ கன்னியான் வருவது செல்லவே செல்லாது

      24
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/26&oldid=1317804" இலிருந்து மீள்விக்கப்பட்டது