பக்கம்:தொடுவானம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலை அழகு



சாவேரி ஆதி

எடுப்பு

காலை அழகைச் சற்றுக் கண்டாலே-மனக் கவலை பறந்தோடும் தன்னுலே !

மேல் எடுப்பு

வேலிப் புதுமலர் மிகுமணம் வீசிடும்!மெல்யாழ் விருந்தினைத் தேன்வண்டு தந்திடும் !

அமைதி

கூட்டி லிருந்து சின்னக் குருவிகள் பாடிடும்!

குதித்துக் குதித்து வெள்ளி கீழ்வானில் தாவிடும்!

வீட்டினுள் சேவலோ விடியலை வாழ்த்திடும் !

 மெல்ல இருள்நழுவக் கீழ்த்திசை வெளுத்திடும் !

 தொடுவானில் செவ்வண்ணக் தொட்டி உருண்டிடும்!

 தோப்பு வயல்க ளெங்கும் பொன்மழை தூறிடும்

 கடமை மறந்திடாப் பரிதியோ கீழ்வானில்

 கரகர வெனச்சுற்றிச் சிறுநகை பூத்திடும் !


6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/8&oldid=1343746" இலிருந்து மீள்விக்கப்பட்டது