பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 35 ஆரம்பித்துவிடுவேன். நஞ்சுண்டன் வந்து கேட்பார். 'என்ன கரக் கரக் எழுதிக்கொண்டே யிருக்கிறீர்கள்? என்பார். என்ன எழுதியிருந்தேன்கிறது படித்தால்தான் தெரியும். 'என்ன ராத்திரி விஷயம் பண்ணினது. பதில் எழுதிட்டீங்களே, என்று கேப்பார். நானா எழுதினேன். அப்படி நினைத்தால் நான் ஒரு முட்டாள். யாரோ உள்ளிருந்து எழுதி வைக்கிறான். குமுதம் பத்திரிகையி லிருந்து வந்து ஒருத்தன் கேட்டான். 'என்ன ஸார், நிறைய கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்களே! மூணு நாலு ரீம் பேப்பர், என் பொண்ணு கொண்டு வந்து கொடுத்த அயல்நாட்டுப் பேனாக்கள் - இவை தாண்டா என்னுது. பாக்கி என்னுது ஒண்ணும் இல்லை - இது எங்கேயிருந்து வந்துச்சு? தோண்டினது என்னமோ உண்மை. என்ன தெரியுமா? பெரியபுராணம் எங்கிறது எங்கள் அப்பா சொத்து. நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார். எத்தனையோ எழுதியிருக்கிறேன். நிறையத் தெரியும். அதை யெல்லாம் எழுதறதுக்கு வேலையற்றுப் போய் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டியதில்லையே! There must be something in it - I do not know - so I began questioning - sigloţub Gøstsir@gsi Grcit. QG56? லிருந்து ஒளிக்கு அழைத்துச் செல். எனக்கு ஒன்றும் தெரியாது, அப்போ யாரோ ஒருத்தர் வந்தார். நான் காஞ்சிபுரத்துக்கு வாரத்துக்கு ஒரு தடவை போவேன் - முதல போகமாட்டேன் என்றுதான் சொன்னேன். அவர் தான் அப்போ இங்கேயே உட்கார்ந்து எழுது”. அவர் தற்செயலாக என்னைச் சந்தித்து பார்த்து, ஏன் உட்கார்ந் திருக்கே என்று கேட்டு.... எப்படி நெறிப்படுத்துகிறது?