பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்றவூர் நித்திலம் 113

(ஏற்றினை-காளைபோன்று செருக்குடையவனை இமயத்துள் எம் ஈசனை -

திருப்பிரிதி எம்பெருமானை, ஆற்றலை-சக்தியுடைவணை;

உய்த்திடும்-செலுத்தவல்ல, ஆழி சக்கரம்: கூற்றினை- எதிரிகட்கு யமன்

போன்றவ்ன், குருமாமணி-சிறந்த நீலமணிமயமான, நித்திலத்தொத்து

-முத்துகளில் திரள்)

என்பது பாசுரம். எம்பெருமான் நித்தியானந்தத்தினால் காளை போல் மிடுக்குடன் மேனாணித்திருப்பவன்; இமயமலையில் திருப்பிரிதியில் தன் இருப்பைக் காட்டி ஆழ்வாரை ஈடுபடுத்திக் கொண்டவன்; இவ்வுலகப் பலன்களையும் சுவர்க்கலோகப் பலன்களையும் விரும்புவார்க்கு அளிக்க வல்லவன்; இச் செயலை நிறைவெற்றுவதற்கு உறுப்பான எல்லா ஆற்றலையும் உடையவன் கையில் கொண்டுள்ள திருவாழியின் மகிமையால் எதிரிகட்கு எமன் போன்றவன்; சிறந்த நீலமணி மயமான மலை போன்றவன்; திருநின்றவூரில் முத்துப்போல் குளிர்ந்த திருமேனி யுடன் எழுந்தருளியிருப்பவன், ஊற்றுணர்ச்சியினால் பரமசுகம் அளிக்கும் காற்றுப்போலே விரும்பத் தக்கவன்; உயிர் தரிப்பதற்கு ஏதுவான நீர் போன்றவன். இப்படிப்பட்ட எம்பெரு மானைக் கண்ண மங்கையில் கண்டதாகக் கூறுகின்றார் ஆழ்வார். நின்றவூரில் இருப்பவனும், கண்ணமங்கையில் எழுந்தருளி யிருப்பவனும், ஐம்பெரும் பூதங்கட்கும் அந்தர்யாமியாக இருப்பவனும் ஒருவனே என்ற தத்துவத்தை இப்பாசுரத்தில் வெளியிடுகின்றார் ஆழ்வார்.

இப்பாசுரங்களையும் அவற்றின் உட்பொருளையும் சிந்தித்தவண்ணம் திருக்கோயிலுக்கு வந்து சேர்கின்றோம். கைகால்களைச் சுத்தம் செய்துகொண்டு திருக்கோயிலுக்குள் நுழைகின்றோம். பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் இவர்களுடன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் பக்தவத்சலரைக் கண்டுகளிக்கின்றோம். எம்பெருமானின் இருப்பைக் கண்டு மகிழும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் நம்மிடற்று ஒலியாக வெளிவருகின்றது.

‘வீற்றிருந்த ஏழ்உலகும் தனிக்கோல்

செல்ல, வீவுஇல்சீர் ஆற்றல்மிக்(கு) ஆளும் அம்மானை

வெம்மா பிளந்தான்தன்னை. போற்றி என்றே கைகள்ஆரத்

தொழுது சொல்மாலைகள் தொ.நா-8