பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

முடிகள் பத்தையும் அயன் சரத்தால் உருண்டோடச் செய்த வீரராகவன்.” அப்பிராட்டியின் காரணமாக வில்லிறுத்த வித்தகன். பசிக்கோபத்தால் இந்திரன் பெய்வித்த கல்மாரியைக் குன்றம் ஏந்தித் தடுத்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தமாயன்."பாரதப் போரில் பார்த்தன் பொருட்டுத் தேர் ஏறும் சாரதியாகித் திருவாழி ஏந்திய கையால் கோலேந்திய கோமகன்.” இத்தகைய எம்பெருமானே திருஅயிந்திர புரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவன்.

திருக்கோயிலின் கருவறைக்குச் சென்று கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் அடியவர்க்கு மேய்யனாகிய தெய்வ நாயகனையும், செங்கமலவல்லி தாயாரையும் (ஹேமாம்புஜ நாயகி) வணங்கு கின்றோம். ஆழ்வார் அருளிச் செய்த பத்துப் பாசுரங்களையும் அவன் சந்நிதியிலேயே மிடற்றொலி கொண்டு ஒதி உளங்கரை கின்றோம். இத்திருக் கோயிலில் தாயாருக்குத் தனிச்சந்நிதி உண்டு. அங்கும் சென்று அன்னையின் அருள் பெறுகின்றோம். இந்த யாத்திரையால் ‘போய பிழைகள், புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்’’’ என்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம்.

இந்த நிலையில் திவ்வியகவியின் திருப்பாசுரமும் நம் நினைவில் எழுகின்றது.

“அன்பணிந்த சிந்தையராய் ஆய்ந்த மலர்தூவி முன்பணிந்து நீர்எமக்கு மூர்த்தியரே என்பர் எம்ஐந் திரபுரத்தார்க்(கு) இன்தொண்டர் ஆனார் தமைஇந் திரபுரத்தார் தாம்’

(அன்பு-பக்தி, ஆய்ந்த மலர்-ஆராய்ந்து எடுத்த மலர் தூவி-சொரிந்து; மூர்த்தியார் கடவுளர்; தொண்டர்-அடியார்; இந்திரபுரத்தார்.தேவர்கள்) என்ற பாசுரத்தையும் ஓதி உணர்ச்சி பரவசத்தராகின்றோம். ‘மணியாழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவாக்குமென்றே, துணியாழிய மறை சொல்லும் என்ற ஆன்றோர் கூற்றுக்கிணங்க எம்பெருமானுக்கு அடிமைப்பட்ட மாத்திரத்தில் அவனோ டொத்த நிலையைப் பெறுதலால் அப்படிப்பட்ட அடியார்களை

28. மேலது - 3.1 : 7 29. மேலது. 3, 1 : 8 30. மேலது - 3.1 . 9 31. திருப் - 5

32. நூற். திருப். அந்- 72