பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்கோவலூர்த் தீங்கரும்பு

207

என்ற புறப்பாடலின் வரிகள் குறிப்பிடுகின்றன. இதையொட்டியே திருமங்கையாழ்வாரும்,

“சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத்
        திருக்கோவ லூர்”[1]

என்று குறிப்பிடுள்ளதாகக் கருதலாம்.

திருக்கோவலூரைப்பற்றிய இன்னொரு வரலாற்றுக் குறிப்பும் உண்டு. ஒளவையார் இவ்வூரில் தனக்கு ஆதரவளித்த ஆயர்குல நங்கையர் இருவருக்கு மூவரசரை வரவழைத்துச் சிறப்பாகத் திருமணம் நடத்தினார் என்று ஒரு வரலாறு வழங்குகின்றது.

“பொன்மாரி பெய்யும்ஊர் பூம்பருத்தி ஆடையாம்
அந்நாள் வயலாகி ஆகும்ஊர்-எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஓங்குதிருக் கோவ லூர்”[2]

என்று ஒளவையார் பாடியதாக ஒரு தனிப்பாடலும் உள்ளது. இன்னும் பாரிமகளின் திருமணம் பற்றி ஒளவையார் பாடியவையாக வேறு பல பாடல்களும் உள்ளன. இவை யாவும் இலக்கியப் புலவர்கட்கு இன்பம் பயப்பதாயினும் உண்மையை அறிய விழையும் வரலாற்று அறிஞர்கட்கு தலைவலியைத் தருபவை.

இருப்பூர்தி நிலையத்திலிருந்து சாலைவழியாகத் திருக்கோவலூருக்குச் செல்லும்பொழுது வழியில் ‘பிருந்தா வனம்’ என்ற ஒர் இடத்தில் மாத்வ சுவாமிகள் மடம் ஒன்றிருப்பதைக் காணலாம். நாட்டின் பல பகுதிகளி லிருந்து பெரும்பான்மையான மக்கள், சிறப்பாக மாத்வ வகுப்பைச் சார்ந்தவர்கள், இங்கே வந்து ஆசி பெற்றுச் செல்வர். மக்கட்பேறு இல்லதவர்கள் இங்கே முக்கியமாக வந்து ஆசி பெறுவதுண்டு.

பூங்கோவல் இடைகழி ஆயனைச் சேவித்த நாம் அவன் சந்நிதியிலேயே ஒருமுறை ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி

  1. பெரி. திரு. 2. 4 : 8
  2. தனிப்பாடல் திரட்டு (கழக வெளியீடு) முதற் பகுதி - 68