பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ

திருச்சிற்றம்பலம்

தொண்டைநாட்டுப்

பாடல் பெற்ற சிவ தலங்கள்

தோற்றுவாய்

தமிழகம் சேர சோழ பாண்டிய நாடுகளைக்

கொண்ட முப் பிரிவினை யுடையதாயினும், நான்காவது பிரிவாகிய தொண்டைநாடு என்னும் பகுப்பினையும் கொண்டது. இதனை ஒளவையார்

வேழம் உடைத்து மலைநாடு மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து- பூழியர்கோன்

தென் நாடு முத்துடைத்துத் தென் நீர் வயல்தொண்டை

நன் னுடு சான்ருேர் உடைத்து

என்னும் பாடல் நான்கு பிரிவுகளைக் கூறுதல் காண்க. இத்தகைய பிரிவுகளுள் ஒன்றான தொண்டை நாட்டில் பாடல் பெற்ற திருக்கோயில்கள் முப்பத்திரண்டு. அவற்றை இனி ஒன்றன்பின் ஒன்றாக விளக்கமுற அறிவோமாக.

ஈண்டுப் பாடல்பெற்ற திருக்கோயில்கள் என்ப தன் குறிப்பு, சைவசமயாசாரியர்கள் நால்வர்களாலேனும் (அப்பர்,சுந்தரர், மாணிக்கவாசகர்,சம்பந்தர்) அல்லது இந்நால்வருள், ஒருவராலேனும் பாடப்பட்டு இருக்கும் பெருமைசான்ற தலங்கள் என்பதாகும். இனி ஒவ்வொரு தலங்களைப் பற்றிய

வே ழம் - யானே, பூழியர்கோன் - பாண்டியன். சான்றோர் - அறிஞர். மலைநாடு - சேரநாடு, .