பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருவாலங்காடு 17

தம்முடைய வர்மூதூர் மிதிக்க அஞ்சிச்

சண்பைவரும் சிகாமணியார் சாரச் சென்று

செம்மைநெறி வழுவாத பதியின் மசடோர்

செழும்பதியில் அன்றிரவு பள்ளி கொள்வார்’

என்று பாடி அறிவித்துள்ளனர்.

சுந்தரரும் ஆலயத்திற்குள் செல்லாமல் துாரத் தில் இருந்தே பாடினர் என்பதையும் சேக்கிழார்,

'அங்கணர்தம் பதி அதனை அகன்றுபோய் அன்பருடன் பங்கயப்பூந் தடம்ப8ண சூழ் பழையனூர் உழைஎய்தித் தங்குவார் அம்மை திருத் தலையாலே வலம்கொள்ளும் திங்கன்முடி யார் ஆடும் திருவாலங் காட்டின் அயல்’ 'முன்நின்று தொழுதேத்தி முத்தாஎன் றேடுத்தருளப் பன்னும் இசைத் திருப்பதிகம் பாடிமகிழ்த் தேத்துவார்’ என்று குறித்துள்ளனர். .

காரைக்கால் அம்மையார், அரவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க' என்று விண் ணப்பித்துக் கொண்டதற்கு இணங்க, ஊர்த்துவத் தாண்டவ மூர்த்தியின் அருகு தொழுத வண்ணம் இருப்பதை இன்றும் நேரில் கண்டு களிக்கலாம். பதஞ்சலி முனிவர் கார்க்கோடகன் என்னும் பெயரி லும், வியாக்கரபாத முனிவர், முஞ்சிகேசர் என்னும் பெயரிலும் இறைவரது நடனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருப்பதையும் காணலாம்.

உடையவர் - அடிமையாகக் கொண்ட சிவபெருமான். சண்பை வரு சிகாமணியாள் - திருஞானசம்பந்தர், சண்பை என்பது சீர்காழிக்குரிய பெயர்களில் ஒன்று. மாடு - பக்கம் அங்கணர் - சிவபெருமான். (அழகிய கண்ணுடையவர்) பதி-ஊர். பங்கயம்-தாமரை. தடம் - குளம், பண வயல். உழை பக்கத்தில், திங்கள் - சந்திரன். அள்ளல் - சேறு. அம் - அழகிய, அடிகள் . இறைவரே, தலைவரே. பழனே - பழையனுார். அத்தா தந்தையே, ஏத்தி - போற்றி,