பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. திருக்கச்சி ஏகம்பம்

3.

பதனுல் என்க. ஏகாமிரம் என்பதற்கு ஒற்றை மாமரம் என்பது பொருள். இறைவர் ஒற்றை மாமரத்தின் அடியில் எழுந்தருளி இருப்பதை இன்றும் கோயிலுக்குள் கண்டு களித்து இன்புறலாம்.

இம்மரத்தின் அருகில் ஏகாம்பரநாதரின் உற்சவ மூர்த்தியையும் (வீதிஉலா வரும் மூர்த்தி) கண்டு மகிழலாம். இங்கு இரண்டு நிலைக் கண்ணாடிகள் உற்சவ மூர்த்திக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் வைக்கப் பட்டுள்ளன. உற்சவ மூர்த்திக்குக் கற்பூர ஒளி காட்டப்படும்போது, இரு பக்கத்துக் கண்ணாடியைப் பார்த்தால் பல தீப ஆராதனை காட்டுவதுபோல் காட்சிதரும். இதை ஒவ்வொருவரும் பார்த்துக் களித்தல் வேண்டும். மாமரத்திற்கு மற்றொரு பக்கத்தில் ஏகாம்பரநாதரின் தேவியரான ஏலவார்குழலி அம்மையாரின் உற்சவத் திருஉருவம் இருப்பதையும் காணலாம். ஏகாம்பரநாதர் கோவிலுக்குள் வேறு மூலட்டான அம்மையார் திருவுருவம் கிடையாது. ஏலவார் குழலியின் உற்சவ மூர்த்தமே மூலட்டான மூர்த்தமாகக் கொண்டு இன்ங்க வேண்டும். காஞ்சிபுரத்தில் எத்தனையோ சிவாலயங்கள் உண்டு. அவை அனைத்திலும் அம்மன் சந்நிதி இருக்காது. அனைத்திற்கும் அம்மன் சந்நிதி, ஊரில் தனித்த கோவிலாக விளங்கும் காமாட்சி அம்மையார் திருக்கோயில் ஒன்றே ஆகும்.

முத்திதரும் நகரங்கள் ஏழு என்பர். அவை மதுரா, மாயா காசி, காஞ்சி, அவந்திகா, பூரி, துவாரகை என்பன. ஈண்டுக் குறிப்பிடப்பட்ட ஏழு தலங்களுள் ஆறு தலங்கள் வடநாட்டுத் தலங்கள். அவற்றுள் ஏழாவது தலமாக நமது தென் நாட்டிலுள்ள காஞ்சி இணக்கப்பட் டுள்ளது. மேலும், ஏழனுள் இதுவே பெருஞ் சிறப்புடையது என்னும் கருத்தில் "முத்திதரும் நகர்