பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

நாள் வந்து பார்க்கையில் இறைவர் குடுமையுடன் இருத்தலைக் கண்டு வியந்து போற்றின்ை. இக் காரணத்தால் இறைவர் குடுமித் தேவர் எனப், பட்டார். இதுவே அவ்வரலாறு.

திருக் காளத்தியில் தீபு மரங்கள் உண்டு. இவ்ை இருட்டில் ஒளியுடன் திகழும். இதனைச் சேக்கிழார் பெருமாளுர் சோதிமா மரங்களால் இங்கு இருள் இல்லை" என்பர். இத் தலத்துக் கல் வெட்டுகளால் நாம் அறிவன:

இறைவர் திருக் காளத்தி உடைய நாயனர், திருக் காளத்திச் சிவனுர், ஆளுடையார், தென் கயிலாய முடையார் என்றும், வீதியில் வரும் பெருமான், சோதி விடங்கர் என்றும் குறிக்கப் பெற்றுள்ளனர்.

இதுபோது மாசி விழா சிறப்பாக நடக்கிறது. கல் வெட்டு மூலம் வைகாசியில் இத் திருவிழா சிறப், புடன் நடந்ததாகத் தெரிகிறது. இவ் விழா தடை யில்லாது நடக்க நரசிங்கக் காளத்தி தேவனுன யாதவ ராசன் தேவதானம் அளித்துள்ளனன்.

உற்சவ மூர்த்தியான சோதிவிடங்கர் எட்டாம். நாள் திருவீதி உலாப் போம்பொழுது, திருச்சாந்து, சந்தனம், பச்சைக் கற்பூரம் மணக்க வெள்ளேச் சாத்துடன் எழுந்தருளுவர். இதன் பொருட்டும், நைவேத்தியமாகத் தோசை, திருக்கண்ணமுது (பாயசம்) நிவேதனம் செய்ய நூறு பணம் கொடுக்கப் பட்டது. மாசி மாதத் திருவிழாவின் ஏழாம் நாளும் இறைவர் திருவீதி உலாப் போம் பொழுது தோசை நிவேதனத்தின் பொருட்டும் நிபந்தம் ஏற்பாடு செய்யப் பட்டது.

திருக் காளத்தி உடையார் கோயில் மலைமேல் ஒரு மடம் இருக்கிறது. இம் மடத்தில் மகேஸ்வரம்