பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 7 శ్రీ

ஏற்றினன் நெற்றிக் கண்ணும் எரிமருள் சடையும் காட்ட மாற்றரும் மருட்சி யான் கண் வடிவெலாம் காட்டி லுைம் சாற்றிய செய்யுள் குற்றம் சடைகொண்டு வெருட்டல் தோற்றிலன் இதனுக்கு” (வேண்டா -சீகாளத்திப் புராணம், என்ருன்.

இத்தகைய செருக்கான மொழிகளைக் கேட்ட சிவபெருமான் நக்கீரரைக் குஷ்ட நோயால் துன்புறச் சபித்தனர். நக்கீரர் தம் குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்டனர். அதுபோது இறைவர் “நீ கயிலே தரிசனம் செய்தால், இந்நோய், தீரும்” என்று கூறத் தட்சண கயிலாயமாகிய திருக் காளத்தியை அடைந்தார். பொன்முகலியில் நீராடி ர், இறைவரையும் தேவியாரையும் வணங்கினர். கைலே வேறு காளத்தி வேறு என்னும் வேறுபாட்டு, உணர்ச்சி இன்றிக் கைலே பாதி காளத்தி பாதி என்னும் அந்தாதி நூலைப் பாடினர். குஷ்டம் நீங்கியது.

'இவரே முதல் தேவர் எல்லார்க்கும் மிக்கார் இவர் அல்ல என்றிருக்க வேண்டா-கவராதே காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி ஆள்வார் நீர் ஆதரித்த தெய்வமே ஆம்’

ஆம் என்று நாளே உளஎன்று வாழ்விலே தாம்என்று வீழ்கை தவம் அன்று-பாம்என்றும் இம்மாய வாழ்வினையே பேணு திருங்கயிலை அம்மானேச் சேர்வ தறிவு'

-கயிலைடாதி காளத்திபாதி அந்தாதி.

எரிமருள் . தீப்போன்ற செந்நிறமுடைய மாற்றரும் மருட்சியான் மாற்றமுடைய விபரீத அறிவுடைய நக்கீரன். சாற்றிய - பாடிய. வெருட்டல் - அச்சுறுத்தல். கவராதே வஞ்சிக்காமல், ஏத்துதிரேல் - போற்றினுல். பேணுது . போற்ருது. இருங் கயிலே - பெருமைமிக்க கயிலைமலை,