பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இணையடி என்மனத் துள்ளவே" என்று பாடி உணர்த்தியுள்ளனர்.

திருக்காளத்தி அப்பரை வணங்குவார் பெறும் பேற்றைக் குறிப்பிடுகையில்,

கோளத்தி அடிகளே அடிதொழ . வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகும்’ கோளத்திஒருவனே, விரும்புவார் அவர்கள்தாம்

விண்ணுல காள்வர்

ஒேங்குவண் காளத்தி உள்ளமோ டுணர்தர வாங்கிடும் வினைகளே வானவர்க் கொருவனே' என்று குறிப்பிட்டுள்ளனர்.

காளத்தி மலேயின் இயற்கை அழகு நன்கு வர்ணிக்கப்பட்டுள்ளது.

மேந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி ஒங்குவண் காளத்தி அட்டமா சித்திகள் அனேதரு காளத்தி என்னும் வரிகளைக் காண்க.

ந்ேதிக் - தென்றல்காற்று, பொழில் - சோலை, மல்கு-பெருகும். வண்மை. வளப்பம். எண்வகைச் சித்திக வளாவன (அனிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகியவைகள்) அணிம - அணுவாகச் சுருங்கல் மகிமா - உருவை ஆகா யம்போல் பெருக்கல். கரிகா - தேகம் மலைபோல் கனத்திருத் தல். இலகிமா கனம் இன்மை ஆதல், பிராத்தி - விரும்பி யதைப் பெறுதல். பிரசகாமியம் பிறர் உடலில் சேரல். ஈசத்துவம் - எவர்க்கும் மேம்பட்டிருத்தல். வசித்துவம் - தன்வசம் ஆக்கல்,