பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

'சுற்றிவண்டி யாழ்செயும் சோலையும் காவும்

து ைதந்திலங்கு பெற்றிகண் டால் மற்றி யாவரும் கொள்வர் பிறரிடைநீ ஒற்றி கொண் டாய்ஒற்றி ஊரையும் கைவிட் டுறும்

(என்றெண்ணி விற்றிகண் டாய்மற் றிதுஒப்ப தில்லிடம் வேதியனே'

என்பது.

அதாவது 'இறைவரே! நீர் எழுந்தருளியுள்ள இந்த இடம், சோலை சூழ்ந்த நல்ல காற்ருேட்டமுள்ள இடம். இதனை யாவரும் விலைக்கு வாங்கிக் கொள்ள முன்வருவர். ஆகவே, இதனை விற்க முற்படுகின் நீரோ? வேண்டா, நீரோ இதனை ஒற்றிஊராக (அட மான ஊராக) பெற்றுள்ளிர்” என்பது.

மற்ருெரு பாட்டில் இறைவரை ஒன்றரைக் கண்ணன் என்று கூறி நகையாடுகிருர். அப்பாடல்,

3.இன்றரைக் கண் ணுடை யார் எங்கும் இல்லை இமயம்என்னும் குன்றரைக் கண்ணன் குலமகள் பாவைக்குக் கூறிட்டநாள் அன்றரைக் கண்ணும் கொடுத் துமை யாளேயும் பாகம்வைத்த ஒன்றரைக் கண்ணன் கண் டீர் ஒற்றி யூர் உறை உத்தமனே’’ என்பது.

இந்தப் பாடல் கருத்தை நன்கு உளத்தில் கொண்ட பலப்பட்ட சொக்கநாதப் புலவர் இறை ஆர்க்கு ஒன்றரைக் கண்ணும்கூட இல்லை. அவருக்கு இருப்பது அரைக்கண்ணே தான் என்று எள்ளி நகை யாடுவார் போன்று,

யாழ் யாழ் இசை. காபூஞ்சோலை, துதைந்து-நெருங்கி, இலங்கு - விளங்கும், பெற்றி - தன்மை, குன்றர்+ ஐக்கு + அண் + நல் + குலமகள் எனப் பிரிக்க மலை அரசகுன பர்வ தராசனுக்கும் தோன் ருமல் வந்து தோன்றிய நல் உமை என்பது இதன் பொருள்.