பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 18 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

திருத்தாண்டகத்தில் திருஒற்றியூர் கீழ்வருமாறு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை,

ஒமத்தால் நான் மறைகள் ஒதல்ஒவா

ஒளிதிகழும் ஒற்றியூர் விடுங்கலங்கள் நெடுங்கடலுள் தின்று தோன்றும்

திரைமோதக் கரைஏறிச் சங்கம் ஊரும் நிருஒற்றியூர் ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்தம் ஆக

ஒளிதிகழும் ஒற்றியூர் ஒல்லேதான் திரைஏறி ஒதம் மீளும்

ஒளி திகழும் ஒற்றியூர். என்னும் வரிகளில் காண்க. பங்குனி உத்திரத்தில் தீர்த்தவாரி இங்கு நடந்த குறிப்பைக் அறியவும்.

இத் தாண்டகப் பதிகத்தில் நான்காவது, ஐந் தாவது, ஆருவது, ஏழாவது, எட்டாவது, பத்தாவது பாடல்கள் அகப்பொருளேத் தழுவினவாகும். அவை தலைவி தோழிக்குக் கூறும் முறையில் அமைந் துள்ளன. அகப்பொருள் இன்னது என்பது முன்பே கூறப்பட்டது.

'எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன

விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்

திருஒற்றி ஊர் என் ருர் தீய வாறே’’ :பயின்றிருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன

ஒளிதிகழும் ஒற்றியூர் என்கின் ருரே'

ஒமத்தால்-யாகத்தியால். நால் + மறை - நான்கு வேதம். கலம் - கப்பல்கள். திரை - அலே, ஒல்லை - விரைவாக. எம் அடிகள் - எம் தலைவரே. வேல்கண் - வேல் போலும் கண், தீயவாறே - என் தீவினையின் பயன் இருந்தவாறு இது ஆகும். பயின்றிருக்கும் . வசித்திருக்கும். பணியீர்-சொல்லி அருள் வீராக.