பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 18 தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

மண் அல்லே விண் அல்லே வலயம் அல்லே

மலே அல்லே கடல் அல்லே வாயு அல்லை எண் அல்லை எழுத்தல்லே எரியும் அல்லே

இரவல்லே பகல் அல்லே யாவும் அல்லே பெண் அல்லை ஆண் அல்லே பேடு அல்லே

பிறிதல்லே ஆளுயும் பெரிய ய் நீயே உண்ணல்ல நல்லார்க்கத் தீயை அல்லை

உணர் வரிய ஒற்றியூர் உடைய கோவே. என்னும் இத் தாண்டகத்தில் இறைவர் எங்கும் தோய்ந்தும் தோயாதும் இருப்பவர் என்பது அழகுற

இயம்பப் பட்டிருப்பதைக் காண்க.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தில் பாடி யுள்ள முதல் பதிகம், சுந்தரர் தம் கண் ஒளி இழந்து அதனைப் பெறுவதற்கு முயன்று பாடிய முறையில் அமைந்துளது. இப் பதிகம் மிகமிக உருக்கமானது. சுந்தரர் தம் குற்றத்தை உணர்ந்து இறைவரிடம் முறையிடுகின்ற முறைகளை இப் பதிகத்தில் கண்டு அறியவும்.

முதல் பாட்டில் 'இறைவரே நான் அழுக்கு நிறைந்த உடம்புடன் உம்மைச் சரண் புகுந்தேன். அந்த அழுக்குடல் கொண்டே நான் படும்பாடு போதுமானது. நான் வாழ்க்கையில் தவறு செய் தாலும் உமது திருவடிகளே நினைப்பதில் தவற மாட்டேன். வழுக்கிக் கீழே விழுந்தாலும் உம் திருப்பெயரைத் தவிர வேறு ஒன்றையும் வாயால் கூறேன். பசுவின் பாலைப் பெற விரும்புபவர், அப் பசுவின் சாணம், மூத்திரம் குறித்துச் சிறிதும் அசூ சைப் படாமல் எடுப்பார்கள் அல்லரோ? அதுபோல என்ன ஆட்கொண்ட நீங்கள் என் பிழைகளைப் பொறுத்து அருள்செய்ய வேண்டாவா? ஆகவே, என்

எரி - தீ. உன்- நல்ல - உண்ணல்ல. வலயம் ஞாயிறு முதலிய மண்டிலங்கள். வாயு - காற்று.