பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

திருவொற்றியூரின் இயற்கை எழில், காட்டும் கலமும் திமிலும் கரைக்கே ஒட்டும் திரைவாய் ஒற்றியூர்' :உத்தும் திரைவாய் ஒற்றியூர்" 'உகளும் திரைவாய் ஒற்றியூர்' :உலவும் திரைவாய் ஒற்றியூர்” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பதிகத்தில் அமைந்த நான்காவது பாடல் அகப் பொருள் அமையப் பாடப்பட்டது. அதாவது திருஒற்றி ஊரன்மீது காதல்கொண்ட ஒருத்தி கூறும் அமைப்பில் உளது.

எேன்ன தெழிலும் நிறையும் கவர்வான் புன்னை மலரும் புறவில் திகழும் தன்னை முன்னம் நினைக்கத் தருவான் உன்னப் படுவான் ஒற்றி ஊரே' என்னும் பாடலைக் காண்க.

சுந்தரர் தமக்கும் இறைவருக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை "எந்தம் அடிகள்” என்றும் "என்னை அடிமையாக உடையான் தன்னை நினைக்கத் திருவருள் தருபவன்’ என்றும் கூறுதலால் உணர 飙}厝星蚤。

ஈற்றுப் பாடலில் இப் பதிகத்தைப் பாட வினே ஒழியும் என்பது உணர்த்தப் பட்டுள்ளது. இதனை 'பாட்டும் பாடிப் பரவித் திரிவார் - ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டுங் கலமும் திமிலுங் கரைக்கே, ஒட்டுத் திரைவாய் ஒற்றி யூரே' என்னும் பாடலில் காண்க.

கலம் - கப்பல். திமில்-படகு, திரை - அல்ல. எழில்அழகு. நிறை - கற்பு, புறவில் - கடற்கரையில். உன்ன - தினக்க. உந்தும் . மோதும். உகளும் . புரள்கின்ற. பரவிதுதித்து. ஈட்டும் . தேடிச் சேர்த்த. -