பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. திருவலிதாயம்

இத்தலம் இதுபோது பாடி என வழங்கப்படு: கிறது. இத் தலத்தைப் பிரகஸ்பதி, அனுமான், பாரத்துவாஜர் முதலியோர் பூசித்துப் பேறு பெற். றுள்ளனர். இவர்கள் பூசித்ததன் குறிப்பாக இவர் களின் பெயரால் தனித்தனித் தீர்த்தம் இங்கு, உண்டு. விக்கிரம சோழன் இத்தலப் பெருமானப் பூசித்து மகப்பேறு பெற்றுள்ளான். இங்குள்ள கிணற்று நீர் நல்ல சுவையுடையது. : -

இத்தலத்து இறைவர் வலிதாய நாதர், திரு. வல்லீஸ்வரர் என்றும், இறைவியார் தாயம்மை, செகதாம்பிகை என்றும் குறிப்பிடப் பெறுவர். இத் தலத்துக் கல் வெட்டுகளால் இறைவர், இறைவி யார் திருப்பெயர்கள் முறையே திருவலிதாயமுடைய நாயனுர் என்றும், திருவீதி நாச்சியார் என்றும் அழைக்கப்பட்டனர் என்பது தெரிகிறது ஒரு. கல்வெட்டுத் திருவெண்காட்டிலிருந்து அழகிய திருச்சிற்றம்பல முடைய நாயனுரை எழுந்தருளிச் செய்து அதற்குப் பூசையினே நடத்தி அவ்வூர்க் குருக்களையும் குடிஏற்றிப் பூசைக்கும் குருக்கள் குடும் பத்திற்கும் உணவு முட்டாதிருக்க நிலம் மான்னியம் இட்டதைக் குறிப்பிடுகிறது. நெல் திருஞானசம்பந்தர் பெயரால் அமைந்த நாழியில்ை அளந்து கொடுக்கப். பட்டதாம். திரிபுவன சக்கரவர்த்தியான ராஜ ராஜன் கேஷத்திர பாலப் பிள்ளையார் கோவிலைக் கட்டி நிவேதனத்திற்காக நிலங்களையும் தானம் செய்தான் என்பதும் தெரிகிறது. விஜயகண்ட கோபாலதேவர் காஞ்சபுரத்திலிருந்து நடன மாதர்களே இங்குக் குடியேற்றியதாகத் தெரிகிறது, இத்துடன் இன்றி. இறைவியார்க்கும் இறைவருக்கும் ஆபரணங்களும் பாத்திரங்களும் கொடுத்தனர் என்பதும் அறிய