பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

ஆடப்பட்டது என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனே, 'கூடிய இலயம் (பல திறன்கள் கூடிய கூத்து) சதி (தாளம்) பிழையாமைக் கொடி இடை உமையவள் காண ஆடிய அழகா' என்னும் வரியால் அறிந்து கொள்ளலாம். உமாதேவி அஞ்சியதால் யானையைக் கொன்று அதன் தோலை உரித்தார் என்றும் கூறப் பட்டுள்ளது. 'மாதர் வெருவிட (அஞ்ச) வேழம் (யானை) அன்று உரித்தாய்' என்னும் வரியைக் காண்க.

சுந்தரர் தமது தொண்டை ' பாடிப் பரவிடும் அடியேன்” என்றும், 'திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன்” என்றும், “திருப்புகழ்விருப்பால் பன் னலத்தமிழால் பாடுவேன் ' என்றும் எல்லியும் பகலும்பணியது செய்வேன்' என்றும் "உன்னைத். தேடித் திரிவேன்' என்றும் பாடி உணர்த்தி இருப்ப தையும் காண்க.

இறுதிப் பாட்டில் இந்தப் பதிகத்தின் பத்துப் பாடல்களையும் உள்ளம் குளிர்ந்து போற்ற வல்லார் கள் நரை, திரை, மூப்பு, நடலை இன்றி விண்ணவர்க் கரசராகத் தேவலோகம் செல்வர் என்னும் பயனைக் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்தை,

உரைதரும் மாலேஓர் அஞ்சினுே டஞ்சும்

உள்குளிர்ந் தேத்தவல் லார்கள் நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி

நண்ணுவர் விண்ணவர்க் கரசே”

என்னும் வரிகளில் காண்க,

தரை - முடிவெளிப்பு, திரை - உடல் தசை அலைபோல்: ஆலேதல், நடலே நடுக்கம்.