பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தொண்டைநாட்டுப் பாடல்பேற்ற சிவதலங்கள்

ருக்குக் காட்சி அளிப்பதால் இது திருமறைக் காட்டுக்கு ஒப்பு எனப்படும்.

திருமறைக் காட்டில்தான் (வேதாரண்யத்தில்) இறைவர் அகத்தியர்க்கு மணக்கோலக் காட்சியைக் காணச் செய்தனர்,

இத்தலத்துப் பாலாம்பிகையையும், திருவலி தாயம் செகதாம்பிகையையும் திருஒற்றியூர் வடி வாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுபவர்கள் இப் பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நலன்களையும் வளன்களே யும் பெறுவர். -

இத் தலத்தில் விஷம் தீண்டுவதில்லை. அதாவது விடப் பயம் இல்லை என்பதாம், விநாயகர், முருகப் பெருமான், திக்குப் பாலகர்கள், திருமால், பிரமன் முதலியோர்கள் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.

தீர்த்தம் வேலாயுத தீர்த்தம். இது வற்ருத நீரையுடையது. இந்தத் தீர்த்தம் முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால் தோண்டித் தோற்றுவித்த தீர்த்தம். இதில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமை, திங்கட்கிழமைகளில் குளித்து வந்தால் எல்லா நோய்களும், தீவினேகளும் நீங்கும். மற்ருெரு. தீர்த்தமும் இங்கு உண்டு. அது வேத தீர்த்தம் எனப்படும். இதில் ஞாயிறுதோறும் நீராடினுல் குட்ட நோய் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இங்குச் சித்திரை மாதம் சித்திரா பெளர்ணமி نتی بع யில் நடக்கும் சந்திப்பு விழா மிகச் சிறப்பானது. இத்தலம் ஆவடி இரயில் நிலையத்திலிருந்து தெற்கே நாலு கல் தொலைவில் உள்ளது. இடையில் காடு விெட்டி ஆற்றைக் கடக்க வேண்டும். பஸ் போக்கு வரவும் உண்டு. ஆனல் பஸ் கோயில் வரையில் செல்லாது. கருமாரி அம்மன் கோயில் வரையில் செல்லும். இவ்வம்மையாரையும் வணங்கி அரை மைல் நடந்தால் இத் தலத்தை அடையலாம்.

கு