பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

விழாக்களில் இம்மகேசுவர பூசை நடந்திருக்க வேண்டும் என்பதையும் குறிப்பாகக் கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படிக் கொண்டால்தான் பன்னிரண்டு மாதங்களிலும் இப்பதிகத்தில் குறிப் பிட்டுள்ள திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன என்பதை உணர முடியும்.

இரண்டாவது பாட்டில் ஐப்பசிஒன விழாவைக் காணுமலும், அவ் விழாவில் அருந்தவத்தவர்கள் உண்டு களிப்பதைக் காணுமலும் போதியோ என்பது கூறப்பட்டுள்ளது. இஃது ஐப்பசி ஒண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணுதே போதியோ பூம்பாவாய்' என்னும் வரியால் அறியப்படுகிறது. ஒண விழா திருமாலுக்குச் சிறப்பாக உரியதாயினும், சிவபெருமானுக்கும் இஃது உரியது என்பது ஈண்டுப் புலப்படுகிறது. திருமால் இராமாவதாரத்தில் இந் நட்சத்திரத்தில் இங்குள்ள இறைவரை வழிபட்டார் என்பது வரலாறு.

மூன்ருவது பாட்டில் கார்த்திகைத் திருவிழா வைக் (விளக்கீடு, அதாவது விளக்கு வரிசை) காணு மல் போதியோ என்று பாடப்பட்டுள்ளது. இவ்விழா மாதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது 'தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணுதே போதியோ பூம்பாவாய்' என்று பாடப்பட்டது கொண்டு தெரிய வருகின்றது. தளத்து ஏந்தும் முலையாவது சந்த்னம் பூசப்பட்ட முலே என்பதாம்.

நாலாவது பாட்டில் திருவாதிரை விழாவைக் காணுமல் போதியோ என்பது குறிக்கப்பட்டுள்ளது. இதனை "ஆர்திரை நாள் காணுதே போதியோ பூம் பாவாய்' என்னும் வரி விளக்குகிறது. ஆர்திரை நாள் திருவாதிரையாகும். இது மார்கழியில் கொண்டாடப்