பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

காஞ்சியின் வெளி மதிலில் புத்தர் மகா நிர் வாண உருவம் சேர்ந்து அமைந்திருக்கிறது. முன் மண்டபத்தில் கரிகாலன் உருவம் உளது. ஆயிரக் கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று காணப்படுகிறது. -

அச்சுதராாயன் என்பவன் க | ம | ட் சி அம்மையார்க்குத் தன் வெற்றிக்கு அறிகுறியாக எட்டு ஊர்களே அளித்துள்ளான். விசேட பூசைக் கும் அமுதுபடி, கறி அமுது, இலே அமுது, அடைக் காய் அமுது (பாக்கு) திருப்பரி வட்டம், சாத்துப்படி, திருவிளக்கு, ஆகியவற்றிற்கு நிபந்தங்கள் விடப் பட்ட செய்திகள் அறியவருகின்றன. ஏகாம்பர் நாதர்க்கு நுந்தா விளக்கு என்றும் எரிய ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வெட்டில் ஏகாம்பர நாதர். காஞ்சிபுரத்து உடையார்,திருஏகம்ப உடைய நாயனுர் எனப்பட்டார். கணபதி தேவன் என்பவனுல் திரு அமுதுபடி, கறிஅமுது, திருப்பரிவட்டம், திருமேனிப் பூச்சு, கற்பூரம், பனிநீர் முதலியவற்றிற்கும், நம்பி மார்க்கும், திருப்பரிசாரகர்க்கும், திருமஞ்சனம் எடுப் பார்க்கும், திருப்பள்ளித்தாமம் தொடுப்பார்க்கும் நிபந்தங்கள் அமைக்கப்பட்டன. பால்பசு, சினேப்பசு, ஆடு, கிடாரி, ரிடபம் முதலியனவும் கொடுக்கப் م 533 مسؤسسائس ثم

இத்தலத்தைச் சார்ந்த நூல்கள் :

இத்தலத்திற்கு மூவர் முதலிகளான சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியுள்ள பதிகங்களே அன்றிச் சிவஞான முனிவர் எழுதிய காஞ்சிப் புராணமும், இவரது மாணவர் கச்சியப்ப முனிவர் பாடிய கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு - இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர்

பட்டினத்தாரது திருவேகம்ப முடையார்