பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருவான்மியூர் 27 to

புரிசைத் திருவான்மியூர், சேதம் இல்லாத் திரு வான்மியூர், தேனுர் சோலைகள் சூழ் திருவான்மியூர், செறிவார் மாமதில் சூழ் திருவான்மியூர், திண்தேர் வீதியது ஆர் திருவான்மியூர் (இதல்ை இத்தலம் தேர் விழாவிற்குச் சிறந்ததாக இலங்கியதை உணர வும்) சென்ருர் தம் இடர் தீர் திருவான்மியூர்” (இத் தொடரை நன்கு சிந்திக்கவும்) என்றும் புகழப் பட்டுள்ளது.

உமை அம்மையார் காதல் மிகுதியினுலும் அன் பின் முதிர்விலுைம் இறைவரது மார்பில் உறங்கும் அழகைத் திருஞான சம்பந்தர் “மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள்வளர் மார்பினனே " என்று இறைவரை விளித்திருப்பது கொண்டு தெளியலாம்.

சமணர், பெளத்தர்கள் காரணம் இன்றி இழி வாகப் பேச வல்லார்கள் என்னும் குறிப்பு. குண்டா டும் சமணர் கொடுஞ்சாக்கியர் என்றிவர்கள் கண் டார் காரணங்கள் கருதாதவர் பேச’ எனும் வரியில் தெரிகிறது. திருஞானசம்பந்தர் தம் அன்பைப் பிற தெய்வங்களிடத்துச் செலுத்தமாட்டேன் என்று கூறி இருப்பதுபோல, ஆருவது செய்யுளில் "இறை வா! உன்னைத்தவிர்த்து வேறு நெறிகளே நினைக்கவே மாட்டேன்' என்றும் கூறியுள்ளனர். இதனே நீதி நின்னே அல்லால் நெறியாது நினைந்தறியேன்” எனும் வரியில் தெளிக. -

திருஞானசம்பந்தர் தாம் பிறந்த ஊரைப் பாக்கு மரங்கள் சூழ்ந்த சீர்காழி என்றும், தம்மை நல்ல புகழால் மிக்கவர் என்றும், இப்பதிகத்தைத் தளரா

செறி - நெருக்கமான, மா - பெரிய. திருவான்மி என்பது திருவான்மியூர் என்பதன் மரூஉ மொழி,