பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. திருஇடைச்சுரம் 285.

செங்கல்பட்டிலிருந்து திருப்போரூருக்குச் செல் லும் வழியில் மூன்று மைல் கடந்து வடக்கே அரைக் கல் சென்ருல் இத் தலத்தை அடையலாம்.

இத் தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. அஃது எண்சீர் விருத்தத் தால் ஆயது. இதன் இலக்கணம் முன்பே கூறப் பட்டது. பண் குறிஞ்சி. இதனே இக்காலத்து அரிகாம்போதி இசை எனலாம். இப் பதிகத்தின் மூலம் நாம் அறிவன :

இத் தலத்து இயற்கை அழகு வெகு அழகுறச் சிறப்பிக்கப்பட்டுள்ளதை,

6 விரிவளர் தருபொழில் இளம்மயில் ஆல

வெண்ணிறத் தருவிகள் தின் என வீழும் எரிவளர் இனமணி புனமணி சாரல், இடைச்சுரம்'

சேற்றயல் மிளிர்வன கயல் இள வாளே

செருச்செய ஒர்ப்பன செம்முக மந்தி ஏற்றையொ டுழிதரு எழில் திகழ் சாரல், இடைச்சுரம்'

'நானமும் புகையொளி விரையொடு கமழ

நளிர்பொழில் இளமஞ்சை மன்னிய பாங்கள் ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல், இடைச்சுரம்'

தரு . மரங்கள். பொழில் - சோலை, ஆல் ஆட. எரி - தீ. இனமணி பலவகை மாணிக்கங்கள். புனம் . தினைப்புனம், மணி - அழகிய செரு - போர். ஓப்பன . கூர்ந்து பார்க்கின்றன. மந்தி - பெண்குரங்கு. (மீன்கள் போர் இடுவதைக் குரங்குகள் பார்த்துக்கொண்டிருக்கும்) ஏற்றை - ஆண்குரங்கு. உழிதரும் - திரியும். நானம் . கஸ்துரி, விரை. வாசனை. தளிரி-குளிர்ந்த, பொழில்.சேஆ. மஞ்சை-மயில், மன்னிய - தில்பெற்ற பாங்கர் . பக்கத்தே. ஏனம் - பன்றி. பிணையல் - பெண்மான். எழில் . அழகு