பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

போது சுற்று முடிவதற்குச் சில கச தூரத்திற்கு முன் உள்ளது. மலேயைச் சுற்றி வரும்போது, சஞ்சீவி மலை இருக்கும் இடம் ஒன்று வருகிறது. அங்கு வேப்ப மரங்கள் மிகுதி. அங்குக் கருங்கல் மேடைகளும் உண்டு. ஒரு கிணறும் உண்டு. சின்னஞ்சிறு கோவி லும் இருக்கிறது. இங்கு மலேயைக் காலேயிலும் மாலை யிலும் சுற்றி வருபவர், சிறிது நேரம் உட்கார்ந்து வேப்பங்காற்றையும் துய்த்து, அங்குள்ள மலை அடிவாரத்தில் இருக்கும் செம்மண்ணே எடுத்து நெற்றியிலும் உச்சியிலும், இட்டுக்கொண்டு சிறிது உள்ளுக்கும் கொள்வர். இப்படிப் பயன் படுத்தும் மண், மலே மருந்து என்றும், அதனை மேற். கூறுயவாறு செய்வதால் நோய் நீங்கும் என்றும் கூறுவர். கிணற்று நீர் சஞ்சீவி மலையின் ஊற்று நீர் என்று அதனையும் பருகி இன்புறுவர். அதைக் கடந்து வரும்போது மாணிக்க வாசகர்க்கு இறைவர் திருவடி தரிசனம் தந்த திருவடிகளைக் காணலாம். அவற்றையும் கடந்ததும் திருமலை சொக்கம்மாள் சந்நிதி சிறு குன்றின்மேல் இருப்பதையும் கண்டு தரிசிக்கலாம். அக் கோவிலுக்குப் பக்கத்தே நின்று மலையை நோக்கி கவலை திருமா?’ என்று கேட்டால் திரும் என்னும் எதிர் ஒலியையும் கேட்டு மகிழலாம்.

திருக்கழுக்குன்ற மலேயைச் சுற்றி வருதற்குரிய துரம் இரண்டு மைல், இரண்டு பர்லாங்கு. இதைச் சுற்றி வரும்போது விஸ்வாமித்திரர் தீர்த்தம், கோடி விநாயகர் தீர்த்தம், மெய்ஞ்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம் முதலானவற்றைக் காணலாம்.

மலேமீது உள்ள இலிங்கப் பெருமான் பின்புறம், மலேயைக் குடைந்து அமைத்த மும்மூர்த்திகளின் உருவங்களையும், மற்றும் பல சிற்பங்களையும் காண லாம். மேற்குப் பக்கம் மும்முர்த்திகளின் உருவமும் வடக்குப் பக்கத்தில் யோக தட்சணுமூர்த்தி உருவ