பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.4 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

ஒன்று தோன்றுவது வழக்கம். இக் காரணம் பற்றி இக் குளம் இப்பெயர் பெற்றது. இச்சங்கு துய்மை செய்யப்பட்டுச் சங்கரபிடேகம் என்னும் விழாவின் போது பயன் படுத்தப்படும். சங்குதீர்த்தக் கரையில் மார்க்கண்டேயர் கோவிலும், இரட்டைப் பிள்ளையார் கோவிலும் உள்ளன. ~

திருக்கழுக்குன்றத்தில் பல இடங்களிலிருந்து மக்கள் திரண்டுவந்து பலநாள் தங்குவர். தங்குவ தற்குச் சத்திரங்கள் உண்டு. இங்குள்ள சங்கு தீர்த் தத்தில் மூழ்கி மலையைக் காலை மாலே வலம் வந்து 蠶 (Dಣ) உடம்பில் பூசியும் உள்ளுக்குச் |றிது உண்டும் வந்தால் குஷ்டநோய் தீரும் என்பது

நம்பிக்கை.

iš.

இங்குச் சித்திரை மாதம் பெருவிழா நடை பெறும். அவ் விழாக்களில் இரடப வாகன சேவை யும், அறுபத்துமூவர் காட்சியும், ஐந்து தேர்கள் ஒடும் இரத உற்சவமும், இராவனேஸ்வர வாகனக் காட்சியும் விசேடமானவை. அதுபத்துமூவர் விழா வின் போது, இறைவர் மலையைச் சுற்றி வருவர். அதுவே அதிகாரநந்தி சேவையும் ஆகும். இது மூன்ரும் நாள் விழா.

சுர குரு தாம்செய்த பசுக்கொலைப் பாபம் நீங்க மலே அடிவாரத்தில் இலிங்கத்தை நிறுவிப் பூசித்த போது கோஹத்திப் பாபம் அவரது சிரசினின்று எழுந்து காக்கை வடிவம் கொண்டு விழுந்ததாம். அங்ங்ணம் வீழ்ந்த இடமே இதுபோது காக்கைமலை எனப்படுகிறது. அங்குக் காக்கைகள் மிகுதியும் வந்து தங்குவதை இன்றும் நேரில் காணலாம். இது சங்கு தீர்த்தத்திற்குத் தென்மேற்கு மூலையில் இருக்கிறது. இந்தச் சுரகுரு அமைத்த கோவிலே பக்தவத்சலர் கோவில் என்பர்,