பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

கிருச். விளக்கிற்காக ஆடுகளும், பொன்னும், திரு அமுதுக்காக நிலமும் விடப்பட்டனவாகத்தெரிகிறது.

இத் தலத்தைப் பற்றிச் சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. அப்பதிகம் எண்சீர் விருத்தத்தால் ஆனது. இதன் பண் குறிஞ்சி. இவற்றின் விளக் கம் முன்பே கூறப்பட்டது. இப்பதிகத்தால் அறிய வருவன : w

இறைவர் அம்மை அப்பராக விளங்கும் நிலை யினே அன்றிரண்டு உருவமாய் எம்.அடிகள்' என்று உணர்த்தி இருப்பதனுல் அறியலாம். இதுவே அன்றி இறைவரின் இனிமையையும், அடியார்மாட்டுக் கொண்டுள்ள அன்பினேயும், தேனினும் இனியர் தீங்கரும் பனேயர் தம் திருவடி தொழுவார் ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சிமேல் உறை பவர்?’ என்று முறையே கூறுதல் கொண்டு தெளிய, லாம்.

இறைவரைப்பற்றி மேலும் குறிப்பிடுகையில், "வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர், வடிவினை யுடையார், பேரருளாளர், பிறவியில் சேரார், பிணியிலர் கேடிலர், பலபுகழ் அல்லது பழியிலர், எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்தரவங்களோடு எழில் பெற நின்ற அண்ணலார்’ (இராவணனுக்கு) அச்சமும் அருளும் கொடுத்த காம் அடிகள், உள்கலாததோர் இயல்பினே 丐5@LL珀、

ஊன் - உடல், தசை, உவகை - மகிழ்ச்சியை, உறை பவர் வாழ்பவர். வானகம் - தேவலோகம். இறந்து . கடந்து. வையகம் . உலகத்தில், வயம் - வெற்றி. பிணி , நோய். இமையவர் - தேவர். ஏத்து - போற்றும் அரவம் ஓசை எழில்-அழகு. அண்ணலார் . பெருமையில் சிறந்த வர் அடிகள்-பெரியவர், தலைவன். உள் கல: . நினைக்காத,