பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. திருஅரசிலி 3 to

வடமேற்கே இரண்டு கல் சென்ருல் அடையலாம். பஸ் போக்கு வரவு உண்டு.

இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் நாம் அறிவன: ஆலாலசுந்தரனுர், திருஅரசிலி உடையார் என்னும் ப்ெயர்களும் இத்தலத்துப் பெருமானுக்கு உண்டு என்பது கல்வெட்டால் அறியப்படுகிறது. அரசிலி ஓய்மா நாட்டைச் சார்ந்தது. ஒய்மா நாட்டின் தலைவன் நல்லியக் கோடின், இவனே இட்ைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனுர் சிறுபாணுற். டுப் படையுள் பாடியுள்ளனர். இவன் பெரிய வள்ளல்.

இத்தலத்துக்குரிய பதிகம் ஒன்றே. அது திரு ஞானசம்பந்தரால் பாடப்பட்டது. இஃது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் ஆனது. இதன் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. இதன் பண் இயந்தைக் காந்தாரம். இதனே இக்காலத்துச் சங்கராபரணத்தின் ஜன்னிய ராகமான நவரோசு அம்சத்தைச் சார்ந்தது என்பர்.

இப்பதிகத்தில் இறைவரது பண்பைப் புகலும் போது, சங்கையாய்த் திரியாமே தன் அடியார்க்கருள் செய்து, அங்கையால் அனல் ஏந்தும் அடிகள்” என் றும், வோன் அஞ்சும்பெருவிடத்தை உண்டவன்’ என்றும்,

கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவசிதமைக் கண்டு அரிய ஆர்.அமு தாக்கும் அடிகள்' பொன்னடி வணங்கும் அருளே ஆர்தர நல்கும் அடிகள்” என்றும் புகழ்ந்துள்ளார். அரசிலி அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி' எனப் புகழப்பட்டுள்ளது.

சங்கையாய் - சந்தேகமாக அங்கை - அழகிய உள்ளங்கை (அகம் - கை) அடிகள் - இறைவர். வரன் . வானவர் (தேவர்). நஞ்சு விடம் அல்லி - அல்லிமலர்.