பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இறைவனுடைய இயல்புகள் எத்தகையன என் பதை உணர்த்தும்போது, "அருவினை அகல நல்கும் அண்ணல் எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம் பன் அருத்தியால் அன்புசெய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்தே எருத்தின இசைய ஏறி ஏகம்பம் மேவினர்' என்று உணர்த்தியுள்ளனர்.

அப்பர் உலக மக்கள் போக்கைத் தம்மேல் ஏற்றி உரைத்துள்ள கருத்து, 'வாழ்த்துமாறு அறிய மாட்டேன் மால்கொடு மயங்கினேனே' என்பது.

கச்சிப்பதி இப்பதிகத்தில் அணியொழில் கச்சி: 'கருமுகில் தவழும்மாடக் கச்சி இடம் உடைக் கச்சி என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப் பதிகத்தில் திருக்கோலக்கா, திருத்துருத்தி, திருப்பழனம் ஆகிய தலங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துளே உ டைத்தாய் அரைமுழம் அதன் அகலம் அதனில்வாழ் முதலே ஐத்து பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சியே கம்பன் நீரே.

-நான்காம் திருமுறை

அரு வினே கொடிய பாவம். இல்கும் - திருஇ குளேத் தரும். எண்திசை எட்டுத் திசைகள், ஏத்த - போற்ற அருத்தி - உண்மை அன்பு. எருத்து இரடபம்.

மகல் - மயக்கம். அணி - அழகிய, .ெ தில் . சேலே, முகில் - மேகம், குட்டம் - குளம். ஒன்பது துளே . கண்துளே இரண்டு, மூக்குத்துளே இரண்டு, செவித்துளே. இரண்டு, வாய்த்துளே ஒன்று, சிறுநீர் கழிக்கும் துனே ஒன்று, மலம் கழிக்கும் துளே ஒன்று ஆக ஒன்பது. ஐந்து. மெய், வாய், கண், மூக்கு, செவி எனு ஐம்பொறிகள். முழை குகை.