பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

அதன் மூலம் அல்லல் படமாட்டோம் என்று உணர்த்திய திறனைக் காணலாம்.

'ஆலும் மாமயில் சாயல்நல் லாரொடும் சால நீஉறும் மால்தவிர் நெஞ்சமே நீல மாமிடற் றண்ணல் ஏ. கம்பகுள் கோல மாமணிப்பாதமே கும்பிடே" என்பது நெஞ்சிற்கு அறிவுறுத்தியது.

உபதேச முறையில் கூறுகையில் 'கச்சி ஏகம் பன் நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே” என்றும், 'எந்தை ஏகம்பம் ஏத்தித் தொழுமினே’ என்றும், 'கச்சி ஏகம்பம் முறைமையால் சென்று முந்தித் தொழுதுமே என்றும், ஏகம்பம் சேர்ப்பதாக நாம் சென்றடைந் துய்துமே'; என்றும், "குறிப்பினுல் சென்று கூடித் தொழுதுமே” என்றும், ஏகம்பம், தருக்கதாக நாம் சார்ந்து தொழுதுமே” என்றும், 'கச்சி யேகம்பம் மேவிய ஐயனைத் தொழுவார்க் கில்லே அல்லலே’ என்றும், கச்சி ஏகம்பம் பொருந் தச் சென்று புடை பட்டெழுதுமே” என்றும் கூறி யுள்ளனர்.

இப்பதிகத்தில் திருக்கச்சி, 'எழிலார்கச்சி, பூம் பொழில்சூழ் கச்சி, கடிபொழில் ஏகம்பம்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பதிகத்தில் இறைவனது நிலையினைக் கூற். வந்தபோது,

ஆலும் ஆடும். நல்லார் - பெண்கள். சால . மிகவும். உறும் - அடையும். மால் மயக்கம். மிடற்று - கழுத்தை கோலம் . அழகிய, புடைபட்டு - பக்கத்தே هتمؤسسة تي بلة சென்று, ஏத்தி - போற்றி, அல்லல் - துயர். தருக்கு - அருள் இறுமாப்பு. எழில்ஆர் - அழகு நிறைந்த, பொழில்சோலே. கடி - வாசனே,