பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

என்பதை ஆசிரிய விருத்தத்துள் அடக்கலாம். ஒர் அடியில் ஆறு சீர்கள் இருப்பின் குறுந்தாண்டகம் எனலாம். எட்டுச் சீர்கள் இருப்பின் நெடுந்தாண்டகம் என்னலாம். திருக்கச்சித் தாண்டகங்கள் இரண்டும் எண் சீரால் வந்தவை. அப்பர் பெருமான்தான் தாண் டகம் பாடுவதில் வல்லவர் என்னும் காரணத்தால், அவர் தாண்டக வேந்தர், தாண்டகச் சதுரர் என்று போற்றப்படுவர். இவரே முதல் முதல் தோத்திர வடிவில் தாண்டகம் பாடியவர். இத் தாண்டகங்களைச் சுத்தாங்கமாக அரிகாம்போதியில் ஒதுவார்கள் பாடிவருகின்றனர். சிலர் பண்முறையில் பியாகடை இசையிலும் பாடுவதும் உண்டு.

முதல் திருத்தாண்டகப் பதிகத்தின் ஒவ்வோர் பாட்டின் ஈறும் அவன் ஏகம்பன்காண் என் எண் ணத்தானே' என்று முடியும். இதில் ஒரு தாண் டகம் முழுவடிவில் கிடைத்திலது.

இறைவனுடைய சிறப்பு இயல்புகளைக் குறிப் பிடும்போது பணிந்து எழுவார் பாவமும் வினையும் போகத் துரந்தவன்” மலர்தூவி நினைந்தெழுவார் உள்ளம் நீங்காது இருந்தவன்' 'துணை என்று தொழு வார் உள்ளம் போற்றவன்' சித்தம் ஆரத் திரு வடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் ஏயவன்' 'அடைவார் தங்கள் பற்றவன்' பரவி நினைந்து எழுவார் தம்பால் கசிந்தவன் முழங்கி உரும் எனத் தோன்றும் மழையாய் மின்னி இடித்தவன் "மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சன்” “அஞ்செழுத்து நினைவார்க்கு என்றும் மருந்தவன்' 'விம்மா நின்று

துரந்தவன் . நீக்கியவன், போற்றவன் - காப்பவன், உள்கி - சிந்தித்து, உயவன் - பொருந்தியவன், பரவி . போற்றி, உரும் . இடி. அஞ்செழுத்து, நமசிவாய மந்திரம், விம்மா - தேம்பி.