பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருவோனகாந்தன்தளி 53

நம் ஆரூரர் இறைவரை உயிர் உள்ள அளவும் மறவாதவர் என்பதை 'உன்னை அல்லால் உரை யேன் நா அதனுல் உடலில் உயிர் உள்ளளவும்" என்று உறுதியுடன் கூறுகின்ருர், இறைவரை நினைந்தால் துன்பம் ஒழியும் என்பதையும் சுந்தரர், நிலையா நின் அடியே நினைத் தேன் நினைதலுமே தலைவா நின்நினையப் பணித் தாய்ச லம்ஒழிந்தேன் சிலையார் மாமதில்சூழ் திரு மேல் த ரிஉறையும் மலேயே உன்னேஅல்லால் மகிழ்ந் தேத்த மாட்டேனே'

என்று பாடி அறிவித்துள்ளார்.

3. திருவோணகாந்தன்தளி

இத்தலம் திரு.ஏகாம்பரநாதர் கோவிலுக்கு மேற்கே, சர்வதீர்த்தக் குளத்திலிருந்து சிறிது வட மேற்கே, நாலு பர்லாங்கு தூரத்தில் உளது. இத் தலம் ஒணன், காந்தன் என்னும் இரு அசுரர்கள் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. தளி என்னும் சொல் கோயில் என்னும் பொருளது. இவ் வசுரர்கள் தனித்தனிப் பூசித்த சிவ லிங்கங்கள் இங்கு உண்டு. ஆலயம் ஒன்றே என்ருலும், இரண்டு சிவலிங்கங்களுக்குத் தனித்தனி முலட் டானங்கள் உண்டு. இறைவர் முறையே ஒணேஸ் வரர், காந்தேஸ்வரர் என்றும், தேவியார் காமாட்சி அம்மையார் என்றும் அழைக்கப் பெறுவர். இதற்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றே உளது.

இப்பதிகம் எண்சீர் விருத்தத்தால் ஆனது. ஒவ்வோர் அடியிலும் எட்டுச் சீர்கள் இருப்பதைக் காண்க. இப்பதிகத்தின் பண் இந்தளம். இப் பண்ணே இக் காலத்தில் இலளித பஞ்சமியிலும், நாதநாமக் கிரியையிலும் பாடுகின்றனர்.

பணித்தாய் . கட்டளே இட்டாய், சலம் - துன்பம். சிலே - கல். மா . பெரிய, ஏத்த - போற்ற,