பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருவோண காந்தன்தளி 55

இரண்டாவது பாடலில் சுந்தரர், இறைவர் தம் தோழர் என்னும் முறையில், சாகசப் பேச்சுகளைப் பாடி இறைவரது குடும்பத்தையே ஏசுவது டோலப் பாடுகிருர். அதாவது "தலையில் கங்காதேவி இருந்து கொண்டு, சககளத்தியாம் உமாதேவிக்குப் பயந்து பேசாமல் இருக்கிருள். கணபதி பெருவயிறன். முருகன் சிறுவன். இறைவியோ, உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாள் அல்லள். ஆகவே, உங் களுக்குத் தொண்டு செய்து யாது பயன்? எனவே தொண்டு செய்ய மாட்டோம்" என்பதாம். இக் கருத்துகள் அடங்கிய பாடலே,

திங்கள் தங்கு சடைகள் மேலோர்

திரைகள் வந்து புரள விசும் கங்கை யாளேல் வாய்தி றவ்வாள்

கண்ப தியேல் வயிறு தாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளே

தேவி யால்கோன் தட்டி ஆளாள் உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்

ஒன காந்தன் தளிஉ ளிரே ' என்பது.

சுந்தரர் இங்குச் சென்று பதிகம் பாடும்போது பதிகத்தின்மீது இருந்த வேட்கையில்ை, பாடலைக் கேட்டுக் கொண்டு இறைவர் சும்மா இருந்தனர். இதனை உணர்ந்த நம்பி ஆரூரர், -

' வல்ல தெல்லாம் சொல்லி உம்மை

வாழ்த்தி லுைம் வாய்தி றத் தொன் றில்லை என்னிர் உண்டும் என்னீர்

எம்மை ஆள் வான் இருப்ப தென்நீர்

திங்கள் - சந்திரன். திரை - அல, அம் . அழகிய, தல்வன் - கணவன், கோன் தட்டி ஆளாள் - கணவனது ஆணேயைக் கடந்து ஆட்கொள்ள மாட்டாள், ஆட்செய் தல் - தொண்டுசெய்தல், -