பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0ே தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

வந்து படியும் கரிய சோலை சூழ்ந்த காஞ்சிபுரமாகிய பழைய ஊர் என்பது.

இப்பதிகத்தைப் பாடுபவர் பாவம் தீரப் பெறுவர் என்பது, "பாவண தமிழ் புத்தும் வல்லார் பறையும் தாம் செய்த பாவம் தானே' என்ற அடியினல் பெறப்படுகிறது. -

இன்ைேரன்ன இலக்கியச் சுவையும், வளமும், அழகும் இப்பதிகத்தில் பொருந்தி இருத்தலின், சேக் கிழ்ார் பெருமானர் இதனை 'கலை விளங்கும் யாணர்ப் பதிகம்" என்று குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருத் தம் தானே !

4. திருக்கச்சி அனேகதங்காவதம்

இத்தலம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்குத் தென்மேற்கே, புத்தேறித் தெருவுக்கு மேற்கே கழனி வெளியில் உள்ளது. காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலுக்குத் தெற்கில் உள்ளது என்றும் கூறலாம். இத்தலத்தில் விநாயகர் அனேகபேச்சுரன் என்னும் பெயரால் ஒரு சிவலிங்கம் தாபித்து வழிபட்டனர். இத்தலத்தை வணங்குபவரது பேற்றைக் காஞ்சிப் புராணம், •ሯ

விநாய கப்பிரான் அருச்சனை புரியவீற் திருக்கும்

அனேக பேசனே அனேகதங் காவதத் திறைஞ்சின்

இதை வெந்துயர்ப் பிறவி தீர்ந் தென் ஆள் உடையான்

தனது வெள்ளியம் கயிலேயில் சார்ந்துவை குவரால் என்று கூறுகிறது.

பாவணம் - பாவடிவாகிய, பறையும் . நீங்கும். துகில் - ஆடை, வரை.எல்லே, வீக்கி-கட்டி, இறைஞ்சின் - வணங் கிகுல். இதை - கொடிய, வைகுவர் . தங்கி இருப்பவர்.